ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#millet

*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.

1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

2.புரதச்சத்து நிறைந்தது.

3. மலச்சிக்கலை போக்கக் கூடியது

4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.

5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் ராகி மாவு
  2. 1/2 கப் அரிசி மாவு
  3. 1கப் தண்ணீர்
  4. உப்பு சிறிதளவு
  5. 1/2கப் தேங்காய் துருவல்
  6. 150கிராம் நாட்டு சர்க்கரை
  7. ஏலக்காய்த்தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ராகி மாவு சேர்த்து சிறிது கிளறி விடவும் அடுப்பை அணைத்து அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி தட்டு போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.

  2. 2

    சிறிது ஆறியதும் சிறிது எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். பூரணம் செய்வதற்கு:- தேங்காய்த் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

  3. 3

    பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி நடுவில் பூரணத்தை வைத்து கொழுக்கட்டையாக செய்து கொள்ளவும் அல்லது
    அச்சு இருந்தால் அச்சில் உள்ளே ராகி மாவை வைத்து அதனுள் பூரணத்தை வைத்து கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும். (படத்தில் காட்டியவாறு செய்து கொள்ளவும்.)

  4. 4

    ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து அதன் மேல் துணி விரித்து செய்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து மூடி வைத்து 5 முதல் 8 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான ராகி கொழுக்கட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes