* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#HF
ராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
5 பேர்
  1. 1 கப்முளைகட்டிய ராகி மாவு
  2. 1/2 கப்கடலை மாவு
  3. 1 கப்நாட்டுச் சர்க்கரை
  4. 1 டேபிள் ஸ்பூன்கோக்கோ பவுடர்
  5. 1/4 கப்காய்ச்சி ஆறின பால்
  6. 1 டேபிள் ஸ்பூன்பசு நெய்
  7. 1 பாக்கெட்ஈனோ
  8. 1 ஸ்பூன்டூட்டிஃப்ரூட்டி
  9. 1 ஸ்பூன்அலங்கரிக்க:- டூட்டிஃப்ரூட்டி

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    முள் கரண்டியை, பிஸ்கெட் மேலே குத்துவதற்கு, பயன்படுத்தவும்.

  3. 3

    பெரிய பௌலை எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    பௌலுக்கு மேல் சல்லடையை வைத்து,முதலில் ராகி மாவை போடவும்.

  5. 5

    அடுத்து கடலை மாவை சேர்க்கவும்.

  6. 6

    பிறகு கோகோ பவுடரை சேர்க்கவும்.

  7. 7

    அடுத்து ஈனோவை சேர்க்கவும்.

  8. 8

    அனைத்தையும் நன்கு சலித்துக் கொள்ளவும்.

  9. 9

    பின்பு, நாட்டுச் சர்க்கரையை சேர்த்து, அனைத்தையும், நன்கு ஸ்பூனால் கலந்துக் கொள்ளவும்.

  10. 10

    கலந்ததும், பாலை சேர்த்து, கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.

  11. 11

    அடுப்பை ஹையில் வைத்து கடாயை சூடுபடுத்தவும்.சூடானதும், ஸ்டாண்டை போடவும்.

  12. 12

    தட்டை திருப்பிப் போட்டு அதன் மேல் நெய்யை நன்கு தடவிக் கொள்ளவும்.

  13. 13

    மாவை தட்டி, முள் கரண்டியால் கோடு போட்டு நடுவில் 1 டூட்டிஃப்ரூட்டியை அழுத்தி வைக்கவும்.

  14. 14

    பிறகு தட்டின் மேல் வைக்கவும்.

  15. 15

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயின் உள்ளே தட்டை வைத்து, மூடி 15 நிமிடம் வேக விடவும்.

  16. 16

    அதேபோல் மற்றவைகளையும், வேக விடவும்.

  17. 17

    வெந்ததும், திருப்பிப் போடவும்.

  18. 18

    வெந்த பிஸ்கெட் அனைத்தையும், தட்டில் எடுக்கவும்.

  19. 19

    இப்போது, ஹெல்தியான,சுவையான, சுலபமான,*முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ்*தயார். செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes