ஹார்ட் வடிவிலான நெய் கிச்சடி (Nei khichadi recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப் வறுத்த ரவை
  2. 2 கப் வறுத்த சேமியா
  3. 2பெரிய வெங்காயம்
  4. 6 பச்சை மிளகாய்
  5. 1/2 தக்காளி
  6. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  7. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  8. 1பிரிஞ்சி இலை
  9. 1பட்டை
  10. 4 கிராம்பு
  11. ஒரு அன்னாசி மொட்டு
  12. ஒரு ஸ்டார் மொட்டு
  13. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. உப்பு தேவையான அளவு
  15. 1/4 கப் கேரட்
  16. 1/4 கப் பீன்ஸ்
  17. 1/4 கப் உருளை கிழங்கு
  18. 1/4 கப் குடை மிளகாய்
  19. 1/4 கப் பச்சை பட்டாணி
  20. ஒரு இணிக்கு கருவேபபிலை
  21. கொஞ்சம்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நெய் கொஞ்சம் ஒரு வாணலியில் விட்டு இரண்டு கப் சேமியா மற்றும் ஒரு கப் ரவையை தனித்தனியாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய காய்கறிகள் அனைத்தையும் படத்தில் காட்டியுள்ளபடி பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு பிரிஞ்சி இலை பட்டை லவங்கம் அன்னாசி மொட்டு ஸ்டார்மொட்டு சேர்த்து சிவக்க விடவும் பிறகு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    காய்கள் வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீரில் காய்களை மூடி வைத்து வேக விடவும். காய்கள் நன்கு வெந்தவுடன் ஒரு டம்ளர் ரவைக்கு 3 டம்ளர் தண்ணீர் மற்றும் இரண்டு டம்ளர் சேமியாவை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் வீதம் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் முதலில் சேமியாவை போட்டு ஒரு கிளறு கிளறி மூடி வைத்து அடுப்பை 2 நிமிடம் நிறுத்தி விடவும்.

  4. 4

    பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் ரவையை கொட்டி நன்கு கிளறி விடவும்.ரவை கையில் பிசு பிசுவென்று ஒட்டாமல் வரும் வரை கிளறி அதில் மேலும் தேவை என்றால் எண்ணெய் சேர்க்கவும். மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும். நன்கு கிளறி விடவும். ஒரு ஹார்ட் வடிவிலான தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பிறகு வேகவைத்த கிச்சடியை தட்டில் வைத்து பரவலாக அழுத்தி தட்டில் கவிழ்க்கவும். ஹார்ட் வடிவிலான கிச்சடி தயார். இருந்து தங்களுக்கு விருப்பமான வகையில் அலங்கரித்துக் கொள்ளவும். நான் தக்காளி சாஸ் வைத்து அலங்கரி தேன்.தொட்டுக்கொள்ள சாஸ் சர்க்கரை அல்லது தேங்காய்ச் கடலை சட்னி நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes