எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. மேகி பாக்கெட் - 70 gm
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. குடை மிளகாய் - 1
  5. டொமேட்டோ சாஸ் - 1 குழிக்கரண்டி
  6. டோமெட்டோ கெட்சப் - 1 டேபிள்ஸ்பூன்
  7. சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
  8. இஞ்சி ஒரு விரல் நீளத் துண்டு
  9. பூண்டுப் பல் - 5
  10. சிவப்பு வர மிளகாய் - 5
  11. உப்பு தேவையான அளவு
  12. சீனி - 1 ஸ்பூன்
  13. மிளகு - 1/4 ஸ்பூன்
  14. எண்ணெய் - 3 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் முக்கால் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது உப்பு சேர்க்கவும்.

  3. 3

    கொதிக்கும் தண்ணீரில் மேகி நூடுல்ஸ்சை சேர்த்து முக்கால் பதம் வேக வைக்கவும். முழுதும் வேக வைக்க கூடாது.

  4. 4

    பிறகு அதனை ஒரு வடிகட்டியில் வடிகட்டவும்.

  5. 5

    வடிகட்டிய பிறகு சட்டியில் அதாவது கூல் வாட்டர் ரில் ஒரு கழுவி வடிகட்டி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி வைக்கவும்.

  6. 6

    மிக்ஸி ஜாரில் சிகப்பு மிளகாய் 5,ஒரு விரல் நீளம் உள்ள இஞ்சித் துண்டு, பூண்டுப் பல், மிளகு சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  7. 7

    பெரிய வெங்காயம் தக்காளி குடைமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  8. 8

    நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் வெங்காயம் பிறகு தக்காளி, குடைமிளகாய் சேர்த்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து சிறிதாக வதக்கி விடவும்.

  9. 9

    பிறகு இதனுடன் மேகி நூடுல்சை சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி விடவும்

  10. 10

    அடுத்ததாக ஹோம் மேட் செஷ்வான் சாஸ் அதாவது மிக்ஸி ஜாரில் நாம் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும்

  11. 11

    பிறகு இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  12. 12

    பிறகு சீனி, மேகி பாக்கெட்டில் உள்ள மசாலா சேர்த்து டொமேட்டோ சாஸ் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  13. 13

    இறுதியாக டொமேட்டோ கெட்சப் சேர்த்து கலந்து விட்டு, டேபிள்ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து இறக்கவும்.

  14. 14

    சுவையான மேகி ஸ்பைசி செஸ்வான் நூடுல்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes