நாட்டு கொத்தமல்லி சட்னி

இது ஞாபகமறதி ஏற்படுவதை தடுத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நாட்டுகொத்தமல்லி ஒரு கட்டை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
பிறகு அடுப்பில் ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டியளவு கல்லப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.இதற்கு கருப்பு உளுந்து சேர்த்து செய்தால் மிகவும் நல்லது.
- 3
பருப்பு வறுபட்டதும் அதில் 20 அளவு சிறிய வெங்காயம்,10 அளவு நாட்டுபூண்டு பற்கள் மற்றும் சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும்
- 4
மேலும் அத்துடன் ஒரு தக்காளி, 5 அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வெங்காயத்தின் நிறம் சிறிதளவு மாறி வரும் வரை வதக்கவும்.
- 6
வதங்கியதும் அதில் கால் மூடி அளவு தேங்காய் பற்கள் சேர்த்து ஒரு பத்து செகண்ட் மட்டும் பிரட்டி விடவும்
- 7
பிறகு அதில் நாம் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் பிரட்டி விடவும்.அதன் பச்சை தன்மை மாறாமல் இருக்க வேண்டும்.
- 8
பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைத்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.இதை அரைக்கும் போது முடிந்த வரை தண்ணீர் சேர்க்காமல், அந்த வெங்காயம் மற்றும் தக்காளியில் உள்ள ஈரப்பதத்திலேயே அரைத்து எடுக்கவும்.
- 9
அவ்வளவுதான் மிகவும் சத்தான வெங்காய கொத்தமல்லி இலை சட்னி தயார்.
- 10
இதை தாளிக்க தேவையில்லை.இது இட்லி, தோசை மற்றும் சாப்பாட்டில் போட்டு அத்துடன் ஒரு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் மிகவும் ஏற்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொத்தமல்லி சட்னி / coriander chutney reciep in tamil


கொத்தமல்லி சட்னி


கொத்தமல்லி சட்னி


கொத்தமல்லி சட்னி


கொத்தமல்லி சட்னி


# flavourful புதினா கொத்தமல்லி துவையல்


கொத்தமல்லி சட்னி


கொத்தமல்லி தொக்கு


கொத்தமல்லி குருமா #book


பீட்ரூட் சட்னி


வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)


புதினா கொத்தமல்லி பொடி


வெந்தயக்கீரை பொரியல்


பூண்டு சட்னி


கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்


உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)


# flavourful கொத்தமல்லி சட்னி


கொத்தமல்லி சட்னி!


கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)


#mom தாய்மை உணவுகள்


கொத்தமல்லி கொழுக்கட்டை


☘️கொத்தமல்லி சட்னி☘️👌


#galatta மல்லிக்கீரை சட்னி


ஹெல்தி சாலட் ரப்


கொத்தமல்லி சட்னி


சிவப்பு மிளகாய் சட்னி


கறிவேப்பிலை குழம்பு


வல்லாரைக் கீரை சூப்


வெஜிடபிள் குருமா


கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)

கமெண்ட்