எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. 1ஆழாக்கு இட்லி ரவை
  2. ஒரு மூடி தேங்காய்
  3. 1கைப்பிடி கொத்தமல்லி தழை இஞ்சி ஒரு சிறு துண்டு புளி சிறிதளவு
  4. பச்சை மிளகாய் ஐந்து தேவையான உப்பு பெருங்காயம் ஒரு ஸ்பூன்
  5. தாளிப்பதற்கு கடுகு உளுந்து 2 வரமிளகாய் கருவேப்பிலை
  6. ஆயில் ஒரு குழிக்கரண்டி

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி தழை ஒரு கப், ஒரு மூடி துருவிய தேங்காய் மிக சிறிதளவு புளி 5 பச்சை மிளகாய் உப்பு சிறு துண்டு இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். இட்லி ரவை ஒரு ஆழாக்கு எடுத்து வைக்கவும்.வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, 2 வர மிளகாய்,கிள்ளிப்போட்டு பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, இரண்டரை ஆழாக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இட்லி ரவையை தூவிக் கிளறி விடவும். சிறிது நேரம் மூடி வைக்கவும் ஐந்து நிமிடத்தில் மாவு பதமாக கொழுக்கட்டை பிடிக்கும் அளவிற்கு வெந்துவிடும். உப்பு சரி பார்க்கவும்.எண்ணெய் குறைவாக இருந்தால் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலந்து விட்டு கொழுக்கட்டை பிடித்து இட்லி பானையில் ஆவியில் வைத்து 8 நிமிடம் வேக விடவும்.

  3. 3

    சுவையான கொத்தமல்லி கொழுக்கட்டை தயார்.பொட்டுக்கடலை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். நீங்களும் செய்து பாருங்கள்.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes