தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு நபர்
  1. ஒரு டம்ளர்சாப்பாட்டு அரிசி
  2. வெங்காயம் 1 பூண்டு 8 பல் முந்திரிப் பருப்பு 8 மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  3. தாளிப்பதற்கு வர மிளகாய் 4 கடுகு ஒரு ஸ்பூன்., உளுந்து ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன்
  4. 4 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்,
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    சாதம் உதிராக வடித்து ஆற வைக்கவும்.வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கவும் மல்லித்தழை கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும் வரமிளகாயை கிள்ளி வைக்கவும். முந்திரிப்பருப்பு கிள்ளி வைக்கவும்

  2. 2

    வாணலில்,நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு சீரகம்,தாளிக்கவும் சிவந்ததும் வரமிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும். வெங்காயம் பூண்டு வதங்கியதும் மல்லி இலை கருவேப்பிலை சேர்த்து கிளறவும்

  3. 3

    முந்திரியை தனியாக சிவக்க வறுத்து சேர்க்கவும். சாதத்தை கொட்டி மெதுவாக கிளறி இறக்கவும்.சூடான,தேங்காய் எண்ணெய் மணத்துடன் பூண்டு மிளகு சாதம் தயார் சுவையாக இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes