குமரி மாவட்ட மோர் குழம்பு / புளிசேரி

Swarna Latha
Swarna Latha @latha

# வட்டாரம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 துண்டுவெள்ளை பூசணி
  2. 1 கப்தயிர்
  3. 1/2 கப்தேங்காய் துருவல்
  4. 4பச்சை மிளகாய்
  5. 1 துண்டுஇஞ்சி
  6. 1 ஸ்பூன்சீரகம்
  7. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் 1, தேங்காய் எண்ணெய்
  9. தேவையான அளவுஉப்பு, தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    நறுக்கிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்

  3. 3

    மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  4. 4

    அரைத்த விழுதை வெந்த பூசணிக்காயில் கொட்டி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    நன்றாக கொதித்ததும், தயிரை கடைந்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

  6. 6

    தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் விடவும்

  7. 7

    நாகர்கோவில் ஸ்டைல் மோர் குழம்பு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes