கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி

Sowmya
Sowmya @vishalakshi

#combo4
மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. ஒரு கப் துருவிய தேங்காய்
  2. 3 பச்சை மிளகாய்
  3. 3 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
  4. 3 சிறிய துண்டு நறுக்கிய இஞ்சி
  5. 3சின்ன வெங்காயம்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. தாளிக்க
  9. 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  10. 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  11. 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  12. 10கருவேப்பிலை இலைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரை மூடி தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்க்க வேண்டும்

  2. 2

    பிறகு அதனுடன் 3 பச்சை மிளகாய் மூன்று சிறிய துண்டு இஞ்சி 3 சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்

  3. 3

    பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    சட்னி தயார் இப்பொழுது அதை தாளித்துவிடலாம் தாளிப்பதற்கு ஒரு கடையில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடு ஏறியதும் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு போட்டு பொரிய விட வேண்டும்

  5. 5

    கடுகு பொரிந்தவுடன் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து சேர்த்து பத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விட வேண்டும்

  6. 6

    பொரிந்ததும் அதை எடுத்து நாம் அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்

  7. 7

    இதோ மிகவும் குறைவான நேரத்தில் மிகவும் சுவையான வெண் பொங்கலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் தேங்காய் சட்னி தயார் வாங்க சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes