தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 100 கிராம் கோதுமை மாவு
  2. தேவையானஉப்பு
  3. தேவையானஅளவு தண்ணீர்
  4. மசாலா செய்ய
  5. 1பெரிய வெங்காயம்
  6. 1தக்காளி
  7. 1பச்சை மிளகாய்
  8. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. கால் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. ஒரு ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  12. தேவையானஅளவு உப்பு
  13. தேவையானஅளவு தண்ணீர்
  14. ரெண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து மெல்லியதாக சப்பாத்தியாக தேய்க்க வேண்டும்

  2. 2

    சின்ன பாட்டில் மூடியை அழுத்தம் கொடுத்து படத்தில் காட்டியுள்ளபடி சிறுசிறு வட்டங்களாக வெட்ட வேண்டும்

  3. 3

    படத்தில் காட்டியவாறு சிறுவட்ட சப்பாத்தியை எடுத்து இரண்டு முனைகளையும் மடக்கி நடுவில் மடக்கி சங்கு வடிவம் போல் செய்ய வேண்டும் அனைத்து மாவையும் இதே போல் செய்து முடிக்கவும்

  4. 4

    அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து செய்து வைத்துள்ள கோதுமை பாஸ்தாக்களை போட்டு 2 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும்

  5. 5

    வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை வெட்டி வைக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  6. 6

    தக்காளியை சேர்த்து வதக்கி தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்

  7. 7

    டொமேட்டோ கெட்சபை சேர்த்து கிளறிவிட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கெட்டியானதும் பாஸ்தாவை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளறி விடவும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் ஹெல்தியான கோதுமை பாஸ்தா ரெடி

  8. 8

    சுவையான சூப்பரான home-made கோதுமை பாஸ்தா

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes