வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
  1. 1ப்ரோக்கோலி
  2. 1/4கப் வால்நட்
  3. 11வெங்காயம்
  4. 10 பல் பூண்டு
  5. 1டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  6. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  7. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    ப்ரோக்கோலியை பிரித்து சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.

  2. 2

    வெங்காயத்தை நீள வாக்கிலும்,பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வால்நட் பொடி செய்து வைக்கவும். எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

  3. 3

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து ஆலிவ் ஆயில் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதன் பின் ப்ரோக்கோலி சேர்த்து ஹை ஃப்ளேமில் வைத்து வதக்கவும்.

  5. 5

    உப்பு, மிளகுத்தூள், வால்நட் பவுடர் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.

  6. 6

    பின்னர் எடுத்து வைத்துள்ள எலுமி்ச்சம் பழ சாறு சேர்த்து வதக்கவும்.கடைசியாக பொடித்த வால்நட்ஸ் தூவி இறக்கினால் வறுத்த வால்நட் ப்ரோக்கோலி தயார்.

  7. 7

    இப்போது தயாரான வறுத்த வால்நட் ப்ரோக்கோலியை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.

  8. 8

    சத்துக்கள் நிறைந்த, சுவையான இந்த வால்நட் ப்ரோக்கோலியை அனைவரும் செய்து சுவைக்கவும்.

  9. 9

    இதை சாலட் போன்று தனியாகவே சுவைக்கலாம். இரவு நேர உணவாக உட்கொள்ளும் போது எடை குறைக்கவும் உதவும். அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes