'ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ்'

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#kayalkitchen

கடையில் வாங்கும் நூடுல்ஸை விட நம் வீட்டிலே கோதுமை மாவை வைத்து செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. தேவையான அளவு தண்ணீர்
  4. தேவையான அளவு உப்பு
  5. ஒரு பெரிய தக்காளி
  6. 3 பெரிய வெங்காயம்
  7. சிறிதளவு பூண்டு
  8. சிறிதளவு இஞ்சி
  9. 1 கேரட்
  10. 1 கேப்சிகம்
  11. ஒரு கொத்து கறிவேப்பிலை
  12. ஒரு கொத்து கொத்தமல்லி
  13. ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  2. 2

    அதோடு தண்ணீர் சேர்த்து கோதுமை மாவை கெட்டியாக பிசைந்து1/4 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும்

  3. 3

    2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும் அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் அந்தத் தண்ணீரில் முறுக்கு பிழியும் கட்டையால் கோதுமை மாவை பிழிந்து பத்து நிமிடத்தில் எடுக்கவும்

  4. 4

    அந்த நூடுல்சை பச்சைத் தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும். பின் தேவையான பொருளை எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்

  6. 6

    காய்ந்த உடன் கறிவேப்பிலை பூண்டு இஞ்சி சேர்த்து தாளிக்கவும்

  7. 7

    அதோடு பொடியாக நறுக்கிய கேரட் கேப்ஸிகம் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  8. 8

    அதோடு உப்பு சேர்த்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கி ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா சேர்த்து கிண்டவும்

  9. 9

    கடைசியாக நூடுல்சை அதில் சேர்த்து கிண்டி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் சுவையான கோதுமை நூடுல்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes

More Recommended Recipes