சமையல் குறிப்புகள்
- 1
தட்டை செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
1டீஸ்பூன் உடைத்த வெள்ளை உளுந்தை வெறும் பாத்திரத்தில் போட்டு லேசான பொன் நிறமாக வறுக்கவும்.
அடுத்து அதனுடன் 1டீஸ்பூன் பொட்டுக்கடலையை போட்டு இரண்டையும் சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
- 2
வறுத்து சூடு ஆற வைத்த வெள்ளை உளுந்து,பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் செய்துக் கொள்ளவும்.
- 3
200கிராம் பச்சையரிசி(இடியாப்பம்) மாவில் பவுடர் செய்த வெள்ளை உளுந்து,பொட்டுகடலை மாவு,1டீஸ்பூன் சீரகம்,1/2டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4டீஸ்பூன் பெருங்காயம் தூள்,1டீஸ்பூன் ஊரவைத்த கடலை பருப்பு(கடலை பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து 1/2மணி நேரம் ஊர வைக்கவும்),தேவையான அளவு உப்பு தூள்,தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு குழைத்துக் கொள்ளவும்.
- 4
பிளேட்டில் ஒரு பாலித்தீன் பேப்பர் விரிக்கவும்.அதன் மேல் ஆயில் தடவிக் கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சிறிய சிறிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
உருண்டை டப்பா வைத்து உருண்டையாகவும், மெல்லியதாகவும் தட்டிக் கொள்ளவும்.
- 5
எண்ணெய் சட்டியில் தேவையான அளவு சன்பிளவர் ஆயில் ஊற்றிக் கொள்ளவும்.
எண்ணெய் சூடான பிறகு தட்டி வைத்த தட்டையை போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.
"தட்டை" தயார்.
- 6
தக்காளி சட்னி செட் செய்ய தேவையான 1வெங்காயம்,2தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.4பல் பூண்டு,2காய்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய்.தேவையான அளவு உப்பு தூள்.
சிறிய துண்டு புளியை 10நிமிடம் ஊரவைத்துக் கொள்ளவும்(அப்போது தான் புளி அரைபடும்).
தக்காளி சட்னி செட்டிற்கு தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் போடவும்.
- 7
மிக்ஸி ஜாரில் போட்ட பொருட்களை பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடான பிறகு அரைத்து வைத்த தக்காளி சட்னி பேஸ்ட்டை ஊற்றி பச்சை வாசம் போகும்வரை நன்றாக வதக்கவும்.
- 8
"தக்காளி செட் சட்னி" தயார்....
- 9
1கையளவு கொத்துமல்லித்தழை,புதினா,1இன்ச் இஞ்சி,1துண்டு தேங்காய் அரிந்து கொள்ளவும்.1பச்சை மிளகாய்,1/2மூடி எலுமிச்சை பழம்(சாறு),தேவையான அளவு உப்பு தூள்,தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
- 10
"மல்லி புதினா செட் சட்னி" தயார்........
- 11
இரண்டு தட்டை உள்ளே வைப்பதற்கு தேவையான பொருட்களை தயார் செய்துக் கொள்ளவும்.
மீடியம் அளவு 2பல்லாரி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
1கேரட்,1/2பீட்ரூட்டை தோல் நீக்கி கழுவிய பிறகு துருவிக் கொள்ளவும்.
தேவையான அளவு கொத்துமல்லித் தழைகள் போடவும்...
1முட்டையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும்...
- 12
தட்டு வடை செட் செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்துக் கொள்ளவும்.
தட்டை வடையின் மேல் பக்கம் தக்காளி சட்னி தடவிக் கொள்ளவும்.
மற்றொரு தட்டையின் பக்கம் மல்லி புதினா சட்னியை தடவிக் கொள்ளவும்.தக்காளி சட்னி தடவிய பிறகு தேவையான அளவு துருவிய பீட்ரூட்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தை உள்ளே தூவவும்.
- 13
அதன் மேலே துருவிய கேரட்,சிறிதளவு கொத்துமல்லித் தழைகள் போட்டு இரண்டு தட்டைகளையும் மேலும் கீழும் வைத்து பிரஷ் பன்னவும்.
தட்டுவடை+தட்டுவடை செட்(தக்காளி சட்னி+மல்லி புதினா)செட்டுகள் தயார்...jjj
- 14
அதே முறையில் ஒரு தட்டுவடையின் மேல் தக்காளி சட்னியும்,மற்றொரு தட்டுவடையின் மேல் மல்லி புதினா சட்னியும் தடவிக்கொண்டு உள்ளே துருவிய பீட்ரூட்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,1பாதி முட்டையை அதன் மேல் வைத்துக் கொள்ளவும்.
அதன் மேல் துருவிய கேரட்,கொத்துமல்லித் தழைகள் தூவி மேலே ஒரு தட்டையை வைத்து லேசாக பிரஷ் பன்னிக்கவும்.
"தட்டுவடை முட்டை செட்" தயார்.....
- 15
"தட்டுவடை+தட்டுவடை(தக்காளி+மல்லி,புதினா+முட்டை)செட்" தயார்......
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)


தக்காளி தட்டுவடை செட்


"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3


"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1


தட்டுவடை செட்


மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)


மசாலா முட்டை பொரி செட்


"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)


"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)


"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)


தட்டுவடை செட்(thattu vadai set recipe in tamil)


"திருநெல்வேலி தேங்காய்பால் சொதிக்குழம்பு" #Vattaram #Week-4


"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4


சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)


பாரம்பரிய மூவண்ணம் சட்னி


முட்டை செட் (Egg set)


மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3


"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2


தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)


முட்டை சட்னி (Muttai chutney recipe in tamil)


ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)


தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)


தட்டுவடை செட் (ThattuVadai Set recipe in tamil)


ஹைதராபாத் பிரியாணி(hydrebad biryani recipe in tamil)


மதுரை ரோட்டுகடை முட்டை பொடிமாஸ்


சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔


பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி(pallipalayam chicken gravy recipe in tamil)


இரவு உணவு "மைதா அடை தோசை & தக்காளி பூண்டு காரச் சட்னி"#Everyday3


"மணக்கத்தக்காளி கீரை சாறு"


கரம் பொரி

கமெண்ட்