டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

இந்த தக்காளி குழம்பு
கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.
#vattaram

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35நிமிடங்கள்
5பேர்
  1. 8பழுத்த தக்காளி
  2. 1/2 கப் சாம்பார் வெங்காயம்
  3. 2டேபிள் ஸ்பூன் தனியா
  4. 2டீஸ்பூன் சீரகம்
  5. 4வற்றல் மிளகாய்
  6. 1/4டீஸ்பூன் மிளகு
  7. 1/2 டீஸ்பூன் சோம்பு
  8. 1/2கப் தேங்காய்
  9. தேவையான அளவுகறிவேப்பிலை
  10. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. தேவையான அளவுஉப்பு
  12. தாளிக்க:
  13. 1டீஸ்பூன் எண்ணெய்
  14. 1/4டீஸ்பூன் கடுகு
  15. தேவையான அளவுகறிவேப்பிலை
  16. 2டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

35நிமிடங்கள்
  1. 1

    தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மேலே கொடுத்துள்ள மசாலாப் பொருள்களை போட்டு பொன்னிறமாக வறுத்து,அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வறுத்து வைத்துகொள்ளவும்.

  3. 3

    வறுத்த பொருட்கள் சூடு ஆறியவுடன்,தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் விழுதாக அரைக்கவும்.

  4. 4

    அதே சமயம் ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதுடன் வதக்கிய தக்காளியை சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  6. 6

    பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,உப்பு சேர்த்து நன்கு விடவும்.

  7. 7

    குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு சரிபார்த்து இறக்கவும்.

  8. 8

    பின்னர் தாளிப்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம்,வற்றல் சேர்த்து நன்கு வதக்கி தயாராக உள்ள குழம்பில் ஊற்றவும்.

  9. 9

    இப்பொது மிகவும் சுவையான டூ இன் ஒன் கோவை ஸ்பெஷல் தக்காளி மசாலா குழம்பு சுவைக்கத்தயார்.

  10. 10

    தயாரான குழம்பை ஒரு பௌலில் சேர்க்கவும். இந்த சுவையான குழம்பு சாதம்,இட்லி,தோசை உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes