எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கப்துவரம் பருப்பு
  2. 3பழுத்த தக்காளி பழம்
  3. புளி - நெல்லிக்காய் அளவு
  4. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 5 பல்பூண்டு
  6. 1/2 டீஸ்பூனமிளகு தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தாளிக்க
  9. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  10. 1/2 டீஸ்பூன்கடுகு
  11. 1 டீஸ்பூன்ஜீரகம்
  12. 3காய்ந்த மிளகாய்
  13. 1/4 டீஸ்பூன்காயப்பொடி
  14. சிறிதளவுகறிவேப்பிலை
  15. சிறிதளவுகொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு சிறிது எண்ணெய், மஞ்சள் பொடி, பூண்டு ஒரு அல்லி, பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளிப் பழம், சிறிது காயப்பொடி இவை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு குழைய வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    வேக வைத்த பருப்பை நன்கு கடைந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    நான்கு பல் பூண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை சேர்த்து நன்கு பொரிய விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கடைசியில் நசுக்கி வைத்துள்ள பூண்டு, மிளகுத்தூள் கலவையையும் சேர்த்து, நன்கு வதக்கி வடிகட்டி வைத்துள்ள பருப்பு தண்ணீர், புளிக்கரைசல் சிறிதளவு சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து மூடி வைத்து மூடி விடவும்.

  5. 5

    தக்காளிப் பழம் சேர்ந்திருப்பதால் புளி கரைசலை பார்த்து சேர்க்கவும்.

  6. 6

    இப்போது சுவையான கமகமக்கும் தக்காளி சாம்பார் ரெடி.

  7. 7

    இந்த சாம்பார் சாதத்துடன் எல்லா வகையான வறுவலும்,பொரியலும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.வடகம், அப்பளம் வைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes