காரசாரமான இறால் மிளகு வறுவல்

Sangeetha
Sangeetha @Sangeetha02
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. அரை கிலோஇறால்
  2. 5பச்சை மிளகாய்
  3. 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது
  4. 2வெங்காயம்
  5. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. 1 ஸ்பூன்மிளகுத்தூள்
  7. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. தேவையான அளவுஉப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    #foodiesfindings இறாலை நன்றாக கழுவி மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை மணம் மாறும் வரை நன்றாக வதக்கவும்.

  5. 5

    அடுத்து அதில் ஊற வைத்த இறால் கலவையை வாணலியில் போட்டு நன்றாக பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இறால் விரைவில் வெந்து விடும்.

  6. 6

    இறால் வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் மிளகு வறுவல் ரெடி.

    இட்லி, தோசை, சாதம் உள்ளிட்டவைகளுடன் தொட்டு, பிரட்டி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Sangeetha
Sangeetha @Sangeetha02
அன்று

Similar Recipes