சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  1. 4 பிரட்
  2. 1 கப் கோதுமை மாவு
  3. 3/4 கப் சர்க்கரை
  4. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
  6. 1/2 கப் சாக்லேட் சிப்ஸ்
  7. பாதாம், முந்திரி
  8. 100 கிராம் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில்,எண்ணெய்,
    (சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் அதே அளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்) சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  2. 2

    அடுத்தது கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும். இதில் பிரட் தூள், சாக்லேட் சிப்ஸ், பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து கலக்கவும்.

  3. 3

    சிறிய உருண்டைகளாக உருட்டி குக்கீஸ் மேலே பாதாம் பருப்பை வைத்து பேக்கிங் தட்டில் வைக்கவும். அடுத்தது oven 'னை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும். குக்கீஸ்'ஸை 180°C அளவில் 30 நிமிடம் பேக் செய்யவும்.

  4. 4

    இதனை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்

    சுவையான சாக்லேட் பிரட் குக்கீஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes