முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்

PV Iyer
PV Iyer @pviyer79
Nagpur

இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 நபருக்கு
  1. 1/2 கப்கோதுமை மாவு
  2. 2-3 மேஜைக்கரண்டிபொடித்த சர்க்கரை
  3. 100 கிராம்டார்க் சாக்லேட்(பொடியாக)
  4. 50 கிராம்சாக்லேட்(பொடியாக)
  5. 1/3 கப்வெண்ணெய்
  6. 1/4 கப்கண்டன்ஸ் பால்
  7. 1/2- 3/4 கப்பால்(தேவையான அளவு)
  8. 1/4 கப்கோகோ பவுடர்
  9. 1/4 கப்நறுக்கிய பாதாம்
  10. 1/4 கப்நறுக்கிய முந்திரி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கி தயாராகி வைக்கவும்.

  2. 2

    கேக் ட்ரேயில் மாவினை தூவி வைக்கவும். இதனால் ஒட்டாமல் எளிதாக வரும்.

  3. 3

    ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து கொதிக்க வைத்து அதனுள் ஒரு சிறிய பாத்திரத்தை வைக்கவும் இது டபுள் பாய்லர் முறை என்று அழைப்பார்கள்.

  4. 4

    அந்த சிறிய பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட் மற்றும் வெண்ணெய் சேர்த்து வைக்கவும்.

  5. 5

    ஒரு கரண்டி நெய் கொண்டு அந்த கலவையை கலக்கி விடவும்.

  6. 6

    சாக்லேட் கலவையை உருகியதும் அதனுள் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும். நான் வீட்டில் செய்த கண்டன்ஸ்ட் மில்க் ஐ பயன்படுத்தி உள்ளேன்.

  7. 7

     பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

  8. 8

    அதில் கோகோ பவுடர் மைதா மாவு மற்றும் பால் சேர்த்து மெல்லியதாக கலக்கவும். தேவையான அளவு பால் சேர்த்துக்கொள்ளலாம். திக்கான இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

  9. 9

    நான் இன்றைக்கு கோக்கோ பவுடர் மற்றும்,மாவு,மற்றும் பாலை மூன்று பகுதிகளாக பிரித்து வைத்து உள்ளேன்.

  10. 10

    பொடியாக நறுக்கிய நட்ஸ் சேர்க்கவும். கொஞ்சம் அலங்கரிப்பதற்காக வைத்துக் கொள்ளவும்.

  11. 11

    இந்த மாவினை பேக்கிங் ட்ரேயில் சமமாக ஊற்றி வைத்து பேக் செய்யவும்.

  12. 12

    பொடியாக நறுக்கிய நட்ஸை டிரேவில் உள்ள மாவின் மீது தூவி அலங்கரிக்கவும்.

  13. 13

    30 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.நான் இன்றைக்கு பேக்கிங் சோடா எதுவும் கலக்கவில்லை நீங்கள் தேவைப்பட்டால் கால் தேக்கரண்டி பேக்கிங் பவுடரை சேர்த்துக் கொள்ளலாம். பேக்கிங் பவுடர் சேர்க்கும்போது அதனுடைய டேக் செய்யும் நேரம் மாறுபடும். 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து வயர் ரேக்கில் வைத்து ஆறியவுடன் எடுக்கவும்.

  14. 14

    உங்களுக்குப் பிடித்தமான ஐஸ்கிரீம் ஸ்கூல் உடன் மிதமான சூடுடன் அல்லது குளிர்ச்சியாகவோ கேக்கை சுவைத்து மகிழுங்கள்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

PV Iyer
PV Iyer @pviyer79
அன்று
Nagpur
🌾Blogger | Influencer🪧Recipe & Content Creator🥗Featuring Homemade🧁 Recipes👨‍🍳Healthy Baking🥧📩19priya79@gmail.com📋Pviyerskitchen.blogspot.com
மேலும் படிக்க

Similar Recipes