எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
இரண்டு பேர்
  1. 4முட்டை
  2. 1வெங்காயம் பெரியது
  3. ஒன்றுதக்காளி பெரியது
  4. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. அரை ஸ்பூன்மிளகுத்தூள்
  6. அரை ஸ்பூன்கரம் மசாலா தூள்
  7. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  8. தாளிக்கசீரகம்
  9. கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு தேய்த்து, அதில் கலக்கி வைத்துள்ள முட்டையை சேர்க்கவும். இட்லிப் பாத்திரத்தில் ஆவி வந்தவுடன் முட்டை ஊற்றி வைத்து உள்ள பாத்திரத்தை வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.

  3. 3

    முட்டை வெந்தவுடன் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  5. 5

    நன்கு கொதித்தவுடன் வேக வைத்து, வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை இதனுடன் சேர்த்து புரட்டவும். ஐந்து நிமிடம் நன்றாக சுருள வதக்கவும். பின்னர் கொத்தமல்லி தழை தூவி, புரட்டி இறக்கவும்.

  6. 6

    சுவையான முட்டை சுக்கா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes