தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 முட்டை
  2. 1 கப் மைதா
  3. 3/4 கப் பொடித்த சர்க்கரை
  4. 1/2 கப் பட்டர்
  5. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 2 ஸ்பூன் பால் பவுடர்
  8. 2 ஸ்பூன் கார்ன் ப்ளார்
  9. 1/2 ஸ்பூன் ஆரஞ்சு எசென்ஸ்
  10. 1 ஸ்பூன் ஆரஞ்சு தோல் துருவல்
  11. 1/2 கப் ஆரஞ்சு ஜீஸ்
  12. 2 ஸ்பூன் ஆரஞ்சு மார்மலேட்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மைதா உடன் கார்ன்ப்ளார் பால் பவுடர் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை இரண்டு முறை ஜலித்து எடுக்கவும்

  2. 2

    முட்டை உடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் உருக்கிய பட்டர் சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் துருவிய ஆரஞ்சு தோல் மற்றும் ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  3. 3

    பின் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து பீட்டரை நிறுத்தி விட்டு மரகரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும் பின் ஆரஞ்சு மார்மலேட் மற்றும் ஆரஞ்சு ஜீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் அதை கப் மோல்டில் ஊற்றி 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கிய ஓவனில் வைத்து 30_35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes