எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

55 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1-1/2கப் மைதா மாவு
  2. 3முட்டை (அ) 3/4 கப் தயிர்
  3. 1/2 கப் ஆரஞ்சு பழச்சாறு
  4. 1டேபிள்ஸ்பூன் துருவிய ஆரஞ்சு தோல்
  5. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 3/4கப் சர்க்கரை
  7. 1/2கப்எண்ணெய் (அ) நெய்
  8. 1டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

55 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கேக் தட்டில் சிறிது எண்ணெய் தடவி மைதா மாவை தூவி தட்டிக் கொள்ளவும் அகலமான பாத்திரத்தில் சிறிது உப்பு அல்லது மணல் சேர்த்து குறைந்த தீயில் 15 நிமிடம் சூடு பண்ணிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் முட்டை சர்க்கரையை சேர்த்து இரண்டும் நன்றாக கலக்கும் வரை கிளறிக் கொள்ளவும் பிறகு எண்ணெய் சேர்த்து இந்த கலவை க்ரீம் ஆக வரும் வரை கலக்கவும்

  3. 3

    முட்டைக் கலவை பாத்திரத்தின் மேல் ஒரு வடிகட்டி வைத்து அதில் மைதா மாவு பேக்கிங் பவுடரையும் சலித்துக்கொள்ளவும்... பிறகு ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    இதனுடன் துருவிய ஆரஞ்சு தோல் சேர்த்து நன்றாக கலக்கவும் இந்த கலவையை எடுக்கும்போது விடாமல் விழவேண்டும் படத்தில் காட்டியவாறு கலவை கெட்டியாக இருந்தால் சிறிது வெந்நீர் விட்டுக் கலக்கி கொள்ளவும்

  5. 5

    இப்போது இந்த கலவையை கேக் தட்டில் ஊற்றி காற்று இடைவேளை இல்லாதவாறு தட்டிக் கொள்ளவும்

  6. 6

    கேக்கு தட்டை உப்பும் கொட்டிய அகலமான பாத்திரத்தில் வைத்து காற்று புகாதவாறு மூடி போட்டு 35 -45 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும் கேக் இணை ஒரு குச்சியால் குத்தி பார்க்கவும் உச்சியில் மாவு ஒட்டவில்லை என்றால் கேட்க வெந்து விட்டது

  7. 7

    கேக் ஆறிய பிறகு அதனை வெட்டி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes