சாக்கோ சிப் குக்கீஸ்(choco chip cookies recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

17 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 1/4 கப் மைதா மாவு
  2. 1/2கப் பவுடர் சர்க்கரை
  3. ஒரு சிட்டிகை உப்பு
  4. 100 கிராம் வெண்ணெய்
  5. 1/4கப் சாக்கோ சிப்ஸ்
  6. 1/4ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

17 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் வெண்ணெய், பவுடர் சர்க்கரை சேர்த்து விஸ்க் வைத்து நன்கு அடித்து கொள்ளவும்.பிறகு இதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அடித்து கொள்ளவும்.

  2. 2

    நன்கு அடித்த பிறகு மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கையால் கிளறி விட்டு தேவையான அளவு சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து விட்டு மாவை ஒன்று சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு சிறிதளவு மாவை கையில் எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி லேசாக தட்டி

  4. 4

    பின்னர் பேக் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து இந்த குக்கீஸ்களை இடைவெளி விட்டு வைத்து அதன் மேல் சாக்கோ சிப்ஸ் வைத்து அழுத்தி கொள்ளவும்.

  5. 5

    மைக்ரோவேவ் ஓவனை கன்வக்ஷன் மோடில் 170 டிகிரி செல்சியஸ் 2 நிமிடம் ப்ரீஹூட் செய்து இந்த ட்ரேயை ஓவனில் வைத்து 14 லிருந்து 17 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

  6. 6

    சூடு ஆறிய பின் ட்ரேயில் இருந்து எடுத்து பரிமாறவும். சுவையான சாக்கோ சிப் குக்கீஸ் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes