முருங்கை காய் சாம்பார்(sambar recipe in tamil)

zaina zuha
zaina zuha @cook_36817778
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 2 கப் துவரம்பருப்பு
  2. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 8 முருங்கை காய்
  4. 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்
  5. 1 கப் சின்ன வெங்காயம்
  6. 8 தக்காளி
  7. 6 பல் பூண்டு
  8. 1 ஸ்பூன் வறுத்த சீரகத்தூள்
  9. 1 டேபிள்ஸ்பூன் வறுத்த மல்லித்தூள்
  10. சிறிதுகறிவேப்பிலை
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. தேவையான அளவுகல் உப்பு
  13. 3 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  14. 100 மில்லி கடலெண்ணெய்
  15. 1 ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை காயை நறுக்கி கொள்ளவும் பருப்பை களைந்து கழுவி தண்ணீரை வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்

  2. 2

    பருப்பு விரிந்து மெத்தென்று வேகவைத்து இறக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் கூட தனியாத்தூள் சீரகத்தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்

  4. 4

    நன்றாக வதங்கியதும் நறுக்கிய முருங்கை காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    பின் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றி முருங்கை காயை வேகவிடவும் காய் வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  6. 6

    பின் நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான முருங்கை காய் சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

zaina zuha
zaina zuha @cook_36817778
அன்று

Similar Recipes