முருங்கை சாம்பார்

Mumtaj Sahana
Mumtaj Sahana @cook_17282471

நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்
#mehuskitchen
# என்பாரம்பரியசமையல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 -25நிமிடங்கள்
  1. பருப்பு வேக வைக்க
  2. ஒரு கப்துவரம் பருப்பு
  3. 1டீஸ்பூன்சீரகம்
  4. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 2 டீஸ்பூன்விளக்கெண்ணெய்
  6. 2 தக்காளி
  7. 1/2 கப்சின்ன வெங்காயம்
  8. 2 கப்தண்ணீர்
  9. முருங்கைக்காய் :
  10. 2 முருங்கைக்காய்
  11. 10பூண்டு பல்லு
  12. அரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  13. 1/2 டீஸ்பூன்மல்லித்தூள்
  14. ஒரு கப்தண்ணீர்
  15. தாளிக்க
  16. அரை டீஸ்பூன்நெய்
  17. ஒரு டீஸ்பூன்கடலை எண்ணெய்
  18. சிறிதளவுகடுகு
  19. ஒரு டீஸ்பூன்சீரகம்
  20. 4 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம்
  21. ஒரு சிட்டிகை தூள்உப்பு
  22. பெருங்காயத்தூள்
  23. சிறிதளவுகருவேப்பிலை
  24. மற்ற தேவையான பொருட்கள்:
  25. மிளகாய்த்தூள்
  26. தேவைக்கு புலி கரைசல்
  27. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  28. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 -25நிமிடங்கள்
  1. 1

    முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி சிறிது நீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும் பத்து நிமிடம் வரை. ஊறிய பிறகு துவரம்பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பை சேர்த்து அதனுடன் விளக்கெண்ணெய் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பருப்பு வேகும் நேரத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைசேர்த்து மல்லித்தூள் மிளகாய் தூள் சிறிது உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்று வேகவைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பருப்பு வெந்த பிறகு புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும், வெந்த முருங்கைக் காயையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை யில் நன்கு கொதிக்கவிடவும். உப்பு காரம் பார்த்து சரிசெய்து கொள்ளவும்.

  5. 5

    தாளிப்பதற்கு நெய், கடலை எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சிறிது வெந்தயம், கடுகு சீரகம் பெருங்காயத்தூள் சின்ன வெங்காயம் கருவேப்பிலை ஒரு சிட்டிகை தூள் உப்பு சேர்த்து நன்று தாளித்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்பொழுது இந்த தாளிப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பு சாம்பாரை சேர்த்து மூடி போட்டு மூடி 2 நிமிடம் வரை வரை மிதமான சூட்டில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

  7. 7

    சுவையான முருங்கை சாம்பார் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

Mumtaj Sahana
Mumtaj Sahana @cook_17282471
அன்று

Similar Recipes