அவரைக்காய் கேரட் சாம்பார்(avaraikkai carrot sambar recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பேர்
  1. 1_1/2 கப் துவரம்பருப்பு
  2. 30 அவரைக்காய்
  3. 4 கேரட்
  4. 2உருளைக்கிழங்கு
  5. 4 பெரிய வெங்காயம்
  6. 10 பல் பூண்டு
  7. 6 தக்காளி
  8. 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  9. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  10. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  11. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. தேவையான அளவுகல் உப்பு
  13. சிறிதுகறிவேப்பிலை
  14. சிறிதுகொத்தமல்லி தழை
  15. 100 மில்லி கடலெண்ணெய்
  16. 1 ஸ்பூன் கடுகு
  17. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  18. 1/2 ஸ்பூன் சீரகம்
  19. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  20. 1 ஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்பு உடன் நறுக்கிய அவரைக்காய் கேரட் உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 1 விசில் மற்றும் 5 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து இறக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்

  3. 3

    பின் சாம்பார் பொடி மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த பருப்பு காய்கறி உடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  4. 4

    நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி வெல்லம் சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சாம்பார் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes