சுவை சத்து நிறைந்த பானம்: தண்டை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#WA ஹோலி ஸ்பெஷல் ரெஸிபி. ஊட்டச்சத்து நிறைந்த புத்துணர்ச்சியூட்டும் சுவையான பானம். பாதாம், முந்திரி வால்நட் கலந்த பானம். நார் சத்துக்கள் ஏகப்பட்ட உலோக சத்துக்கள்- ZINC, IRON,, MAGNESIUM. VITAMINS A. E .B நோய் எதிர்க்கும் சக்தி. நல்ல கொழுப்பு சத்துக்கள் OMEGA FATTY ACIDS உடல் வளர்ச்சிக்கு நலம் . reproductive organs, இதயம், ஜீரண உறுப்புக்கள் இவைகளுக்கு நலம் தரும் குங்குமப்பூ: ஏகப்பட்ட நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும், இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். Post menopause syndrome குறைக்கும். ஏலக்காய்: ஜீரண சக்தி அதிகரிக்கும்,

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. தண்டை மசாலா பேஸ்ட்:
  2. 1 கப் பாதம்
  3. 1/4 கப் வால் நட்
  4. 1 கப்முந்திரி
  5. 1 கப் முலாம்பழம் விதைகள்
  6. 2 டீஸ்பூன்மிளகு (வெள்ளை அல்லது கருப்பு)
  7. 1/4 கப் பாப்பி விதைகள், கஸ காஸா
  8. 1/4 கப் பெருஞ்சீரகம் விதைகள்
  9. 20 ஏலக்காய்
  10. 1 தேக்கரண்டிகுங்குமப்பூ
  11. 3 மேஜை கரண்டி ரோஜா இதழ்கள் (உலர்ந்த)
  12. 1 1/2 கப்தண்ணீர் (ஊறவைக்க)
  13. மற்ற மூலப்பொருள்கள்:
  14. தேவையானசர்க்கரை அல்லது தேன்
  15. 10 கப் பால்
  16. க்யூப்ஸ்பனிக்கட்டி ice cubes
  17. அழகுபடுத்த:
  18. 1 மேஜைகரண்டி நட்ஸ் கலவை, சாப்ட்/ டம்ளர்
  19. 1 தேக்கரண்டிரோஜா இதழ்கள்/ டம்ளர்
  20. சில குங்குமப்பூ இழைகள்/ டம்ளர்
  21. பானம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    சரிபார்ப்புப் பட்டியலைத் தயாரிக்கவும்; பொருட்களை கைகருகில் வைத்திருங்கள்

  2. 2

    தண்டை மசாலா பேஸ்ட் (ஸ்டாக்):
    ஒரு பெரிய கிண்ணத்தில் மசாலா பொருட்களை 6 மணி நேரம் ஊறவைக்கவும்,
    ஊறவைத்த பொருட்களை தண்ணீருடன் பிளெண்டர் ஜாடிக்கு மாற்றவும்.

    மிகவும் மிருதுவான பேஸ்டாக செய்க. தண்டை மசாலா பேஸ்ட் தயார். 8 நண்பர்களுடன் ஹோலி விருந்து வைத்தேன். 8 டம்ளர் உருவாக்க இந்த பேஸ்டின் 1 1/2 கப் பயன்படுத்தினேன். எஞ்சியிருக்கும் மசாலாவை பிற்கால உபயோகத்திற்காக எங்கள் ஃப்ரீசரில் உறைய வைத்தேன்

  3. 3

    8 பேர் கொண்ட பார்ட்டிக்கு தண்டை தயார் செய்ய:

    1 டீஸ்பூன் குங்குமப்பூவை 3 மேஜைகரண்டி சூடான பாலில் ஊறவைத்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

    ஒரு பிளெண்டரில் 1 கப் தயாரிக்கப்பட்ட தண்டை மசாலா பேஸ்ட் மற்றும் ¼ கப் சர்க்கரை அல்லது ¼ கப் தேன் எடுத்துக் கொள்ளவும்.

    10 கப் குளிர்ந்த பால், ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு ஜாருக்கு மாற்றி ரேபிரிஜெரேட்

  4. 4

    பரிமாறும் முன், உயரமான கண்ணாடி தம்பளரில் ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும். 1 ½ கப் தண்டை மசாலா பால் கலவையை தம்பளரில் சேர்க்க. ஸ்பூனால் மிக்ஸ் செய்க. உலர்ந்த நட்ஸ்கள், சில குங்குமப்பூ இழைகள் மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களால் அலங்கரிக்கவும். சுவையான சத்தான தண்டை பருக. காலை, மாலை எப்பொழுது வேண்டுமானாலும் பருக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (5)

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes