சத்து சுவை மிகுந்த கேரட் அடை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சத்து சுவை மிகுந்த கேரட் அடை செய்வது எளிது, இஞ்சி, மிளகாய்; பூண்டு நலம் தரும் பொருட்கள். அடை மாவு அரிசி, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம், வெங்காயம், ஒரு பாதி கேரட் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். அடை செய்வதற்கு முன் பாதி கேரட் , வெள்ளரிக்காய் துருவி மாவில் சேர்த்தேன். கூடவே கறிவேப்பிலை, பார்சிலி, உப்பு போட்டு கலந்தேன். வெள்ளரிக்காய் நல்ல வாசனை கொடுக்கிறது. பாதி மாவை ரேபிரிஜேரடெரில் வைத்துவிட்டேன். மீதி பாதி மாவில் அடை செய்தேன். நான் இரும்பு தோசைக் கல்லைதான் அடை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோக்கியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். கல்லின் மேல் சிறிது எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைக்க. நான் மெல்லிஸாகதான் அடை செய்வேன். மொரு மொருவென்று இருந்தால்தான் எனக்கு பிடிக்கும், ஸ்ரீதர்க்கு தடியா மெத்து மெத்தென்று வேண்டும் உங்கள் விருப்பம் போல செய்துக் கொள்ளுங்கள், அழகிய நிறம், ஏகப்பட்ட விட்டமின்கள், உலோகசத்துக்கள், ருசி மிகுந்த அடை தயார். 10அடைகள் செய்தேன். 6 அடைகளை பக்கத்து வீட்டில் இருக்கும் அமரிக்க நண்பர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் விரும்பி சாப்பிட்டார்கள் #carrot #book

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60-75 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 3 கப் அரிசி
  2. 1 மேஜை கரண்டி பார்லி
  3. 1 மேஜை கரண்டி முழு பயறு
  4. ½ கப் முழு உளுந்து
  5. 1 மேஜை கரண்டி கடலை பருப்பு
  6. 1 மேஜை கரண்டி வெந்தயம்
  7. 1 அங்குலம் இஞ்சி, தோலுரித்தது
  8. 4 உலர்ந்த மிளகாய்
  9. 4 பல் பூண்டு
  10. ½ கப் வெங்காயம் நறுக்கியுயது
  11. 1 மேஜை கரண்டி ஈஸ்ட்
  12. 2 கப் கேரட், துருவியது
  13. ½ கப் வெள்ளரிக்காய், துருவியது
  14. ½ கப் கறிவேப்பிலை
  15. ½ கப் பார்சலி (parsley)
  16. தேவையானஉப்பு
  17. தேவையானஎண்ணை

சமையல் குறிப்புகள்

60-75 நிமிடங்கள்
  1. 1

    1. ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

  2. 2

    நீரில் தானியங்கள், பருப்புகள், வெந்தயம் 4-6 மணி நேரமாவது ஊறவைக்கவும். கூட இஞ்சி, மிளகாய், பூண்டு, வெங்காயம், ஒரு பாதி கேரட் சேர்த்து கிரைண்டரில் போட்டு கொற கொறவென்று அறைக்கவும். ஈஸ்ட் சேர்த்து ஒன்றாக கலக்க. 4-5 மணி கழித்து மாவு பொங்கும், தேவையான உப்பு சேர்த்து கிளறவும். அடை செய்யும் முன் மீதி பாதி கேரட், வெள்ளரிக்காய். கறிவேப்பிலை, பார்சலி (parsley சேர்த்து நன்றாக கிளறி கலக்கவும்

  3. 3

    தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், கல்லின் மேல் எண்ணை தடவி எப்பொழுதும் அடை செய்வது போல ¼ -1/2 கப் மாவில் ஒரு அடை செய்க. இரண்டு பக்கமும் வேகவைக்க. 3-4 நிமிடங்களில் ஒரு அடை தயார்.

  4. 4

    எப்பொழுதும் சுவைத்துப்பாருங்கள். நிறம் அழகாகவும், சுவையாகவும் இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ அல்லது விருப்பமான சட்னியோடோ, ஊறுகாயோடோ, மிளகாய் பொடியோடோ, கூட்டோ அல்லது துவையலடோ பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes