*முலாம் பழ மில்க் ஷேக்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. முலாம்பழ துண்டுகள் 1/2 கப்
  2. காய்ச்சி ஆறின பால் 1 டம்ளர்
  3. ஆர்கானிக் சுகர் 1/4 கப்
  4. அலங்கரிக்க:- தோல் சீவிய முலாம்பழ துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பெரிய மிக்ஸி ஜாரில், முலாம்பழத்தை சுத்தம் செய்து, தோல், மற்றும் விதைகளை நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி போடவும்.

  3. 3

    அடுத்து ஆர்கானிக் சுகரை சேர்க்கவும்.

  4. 4

    இரண்டையும் மைய அரைக்கவும்.

  5. 5

    பிறகு பாலை சேர்த்து, பல்ஸ் மோடில் வைத்து அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்போது,*முலாம் பழ மில்க் ஷேக்*தயார். அரைத்ததை ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது, டம்ளரில் ஊற்றி, மேலே முலாம்பழ துண்டுகளை போட்டு ஜில்லென்று பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes