*குக்கும்பர் லஸ்ஸி* (சம்மர் ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

வெள்ளரிக்காய் பசியைத் தூண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். இதில் இரும்பு, கால்ஷியம், குளோரின் போன்றச் சத்துக்கள் அதிகம் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. வெள்ளரிக்காய் 1
  2. புளிப்பில்லாத கடைந்த கெட்டி தயிர் 2 டம்ளர்
  3. சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு 1 சிட்டிகை (ருசிக்கு)
  5. நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன்
  6. அலங்கரிக்க:- வெள்ளரிக்காய் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெள்ளரிக்காயை சுத்தம் செய்து தோலை சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

  3. 3

    பெரிய மிக்ஸி ஜாரில், வெள்ளரிக்காயை போடவும்.

  4. 4

    அடுத்து, உப்பு, கடைந்த தயிரை சேர்க்கவும்.

  5. 5

    பிறகு சர்க்கரையை சேர்க்கவும்.

  6. 6

    அனைத்தையும் நன்கு அரைக்கவும்.

  7. 7

    கிளாஸ் டம்ளர்களில், முதலில் வெள்ளரி துண்டுகளை போடவும்.

  8. 8

    பின், அரைத்ததை ஊற்றி, மேலே வெள்ளரி துண்டுகளை போடவும்.

  9. 9

    அலங்கரிக்க வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தட்டை சுற்றி வெள்ளரி துண்டுகளை வைத்து, நடுவில் கிளாஸ் டம்ளர்களை வைத்து, மேலே, 2 வெள்ளரி துண்டுகளை சொறுகவும்.

  10. 10

    இப்போது, ஹெல்தியான, சுவையான, சுலபமான,*குக்கும்பர் லஸ்ஸி*தயார். சம்மருக்கு இந்த ரெசிபியை செய்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes