*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  1. கேரட் 8
  2. பீட்ரூட் 1
  3. தேங்காய் துருவல் 1/4 கப்
  4. ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
  5. தனி மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
  6. உப்பு ருசிக்கு
  7. தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  8. க.பருப்பு 1/2 ஸ்பூன்
  9. உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  10. சி.மிளகாய் 3
  11. ப.மிளகாய் 2
  12. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  13. எண்ணெய் 2ஸ்பூன்
  14. தண்ணீர் தேவையான அளவு
  15. அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின கேரட், பொடியாக நறுக்கிய பீட்ரூட், துண்டுகள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ப.மிளகாயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கேரட், பீட்ரூட்டை, சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு பொரிந்ததும், க.பருப்பு, உ.பருப்பு, ப.மிளகாய், சி.மிளகாய், சிவந்ததும், ம.தூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  4. 4

    அடுத்து, கேரட், பீட்ரூட், சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

  5. 5

    வெந்ததும், தேங்காய் சேர்த்து, ஒன்று சேர குழையாமல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே கறிவேப்பிலை சிறிது போட்டு கிளறி இறக்கவும்.

  6. 6

    இறக்கினதும் பௌலுக்கு மாற்றவும்.

  7. 7

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*தயார்.செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes