எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 mins
3 பரிமாறுவது
  1. இறால் - 500 g
  2. எண்ணை - 1 Tbsp
  3. சோம்பு - 1 Tsp
  4. பட்டை - 1 Inch
  5. கிராம்பு - 3 Nos
  6. வெங்காயம் - 1 No
  7. தக்காளி - 1 No
  8. இஞ்சி பூண்டு விழுது - 2 Tsp
  9. மஞ்சள் தூள் - 1 tsp
  10. மிளகாய் தூள் - 1 tsp
  11. மல்லி தூள் - 2 Tsp
  12. கரம் மசாலா - 2 tsp
  13. மிளகு தூள் - 1 tsp
  14. உப்பு - 1 Tbsp
  15. தண்ணீர் - 1/2 Cup
  16. கருவேப்பிலை - 1 (சிறிதளவு)
  17. கொத்தமல்லி இலை - 1 (சிறிதளவு)

சமையல் குறிப்புகள்

40 mins
  1. 1

    இறால் நன்கு கழுவி சுத்தம் செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றவும். சூடான பின்னர் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து பொறிந்தவுடன் வெங்காயம் சேர்க்கவும்.

  3. 3

    வெங்காயம் பொன்னிறமான பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பின்னர் தக்காளி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  5. 5

    எண்ணை தனியே வெளியேறும் நேரத்தில் இறால் சேர்த்து கிளரவும். 5 நிமிடம் மூடி வேக வைத்த பின் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

  6. 6

    சுவையான இறால் தொக்கு தயார்.

  7. 7

    சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி உடன் உண்டு மகிழுங்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Keerthi Vinodh
Keerthi Vinodh @cook_16891111
அன்று

Similar Recipes