எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் இறால்
  2. வறுத்து அரைக்க :-
  3. 1/2 தேக்கரண்டியளவு மல்லி
  4. 1/2 தேக்கரண்டியளவுசீரகம்
  5. 1/2 தேக்கரண்டியளவு மிளகு
  6. 1/2 தேக்கரண்டியளவு சோம்பு
  7. 2 ஏலக்காய்
  8. 2 கிராம்பு
  9. சிறியஅளவில் பட்டை
  10. 2 பகுதி நட்சத்திரசோம்பு
  11. 3காய்ந்த மிளகாய்
  12. 1வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
  13. 1தக்காளி
  14. 1 தேக்கரண்டியளவு இஞ்சி பூண்டு விழுது
  15. 2 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை இளம்சூட்டில் வறுத்து தூளாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு தவாவில் தேங்காய் எண்ணெய் காயவிட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. பின் அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    மசாலா வாடை அடங்கியதும் தக்காளி சேர்த்து லேசாக உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்

  6. 6

    பின் இறால் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு 7 நிமிடம் வேக விடவும்.

  7. 7

    இறால் அதிக நேரம் வேக விடக்கூடாது.

  8. 8

    இறால் வெந்ததும் நன்றாக பிரட்டி விட்டு கடைசியாக கொத்தமல்லி இலை அல்லது கசூரிமேத்தி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes