தேவையான பொருட்கள்

  1. தேவையானபொருட்கள்:
  2. நாட்டு கோழிக்கறி – ½ கிலோ
  3. சின்ன வெங்காயம் – 1/4கிலோ
  4. இஞ்சி – சிறிய துண்டு
  5. பூண்டு – 4 பல்
  6. கொத்த மல்லி இலை – சிறிதளவு
  7. உப்பு – தேவையான அளவு
  8. மசால் தயாரிக்க:
  9. கொத்த மல்லி விதை – 5 ஸ்பூன் அல்லது 10 கிராம்
  10. சீரகம் – 2½ ஸ்பூன் அல்லது 5 கிராம்
  11. வத்தல் – 8
  12. நல்ல எண்ணெய் – 200 கிராம்
  13. மஞ்சள் பொடி – சிறிதளவு
  14. கடுகு – ½ ஸ்பூன்
  15. தாளிக்க:
  16. நல்ல எண்ணெய் – 200 கிராம்
  17. கடுகு – ½ ஸ்பூன்
  18. கறிவேப்பிலை – ஒரு கொத்து

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோழிக் கறியை துண்டுகளாக்கி, அலசிக் 1/2 வேக்காடாக கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும். கொத்த மல்லி இலையை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    அடி கனமான பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  3. 3

    பின் அதனோடு இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். 1 நிமிடம் கழித்து மசால், கோழிக்கறி, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீரைத் தெளிக்கவும்.

  4. 4

    விரவினது போல் உள்ள கோழிக்கறி கலவையை அடுப்பை சிம்மில் வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். இடை இடையே மெதுவாக கிளறி விடவும்.

  5. 5

    கோழிக்கறி வேகும்போது எண்ணெய் பிரிந்து வந்ததும் பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்த மல்லி இலையைத் தூவி இறக்கவும். சுவையான கோழி சாப்ஸ் தயார்.

  6. 6

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes