எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ நாட்டு கோழி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/4டீஸ்பூன் தலா பட்டை கிராம்பு ஏலக்காய் தூள்
  5. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 1 ஸ்பூன் மிளகு தூள்
  7. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 2டீஸ்பூன் சோம்பு
  9. 1 ஸ்பூன் சீரகத்தூள்
  10. 4 ஸ்பூன் தயிர்
  11. 4 ஸ்பூன் எண்ணெய்
  12. மல்லித்தழை சிறிதளவு
  13. கருவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சீரகம் கறிவேப்பிலை சேர்க்கவும்

  2. 2

    பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  4. 4

    தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    மிளகு தூள் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரை வேக விடவும்.

  6. 6

    குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் வற்ற விடவும்.மல்லித் தழை தூவி அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes