ஸ்வீட் கார்ன் பொட்டேட்டோ ஸ்டஃப்டு மிர்ச்சி #பொரித்த

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ பஜ்ஜி மிளகாய்
  2. 1/4கப் ஸ்வீட் கான்
  3. 1 துருவிய உருளை கிழங்கு
  4. 1வெங்காயம் சிறியது
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/4 டீஸ்பூன் மாங்காய்தூள்
  7. 1/4கப் மைதா மாவு
  8. 1/4கப் கார்ன்ஃப்ளார்
  9. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. 1/2கப் பிரெட் கிரம்ஸ்
  11. தேவையானஅளவு கொத்தமல்லி தழை
  12. தேவையானஅளவு உப்பு
  13. தேவையான அளவு ஆயில் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பிறகு அதில் துருவிய உருளைக்கிழங்கு மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு மாங்காய் தூள் கால் டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    உருளைக்கிழங்கு மற்றும் சோளம் வெந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி கிளறி வைக்கவும். ஸ்டப்பிங் தயார்

  4. 4

    பஜ்ஜி மிளகாயை நடுவில் பூரணம் வைப்பதற்காக கீறிக் கொள்ள வேண்டும். உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவேண்டும். பிறகு அதில் தயார் செய்து வைத்த ஸ்டாப்பிங் வைக்க வேண்டும்

  5. 5

    ஒரு கப்பில் கால்கப் மைதா மாவு கால் கப் கார்ன்ஃப்ளார் கால் டீஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டாப் செய்த மிளகாயை இதில் டிப் செய்து பிறகு பிரட் கிரம்ஸ் புரட்டி கொள்ளவும்

  6. 6

    பிறகு தேவையான எண்ணெய் விட்டு செய்து வைத்துள்ள ஸ்டஃப்டு மிளகாய் பொரித்து எடுக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் அண்ட் பொட்டேட்டோ ஸ்டஃப்டு மிர்ச்சி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
அன்று

Similar Recipes