கீரைத்தண்டு முருங்கை  சாம்பார்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/2சுரைக்காய்
  2. 1 கட்டுதண்டுக்கீரை
  3. 1முருங்கை காய்
  4. 1பெரிய வெங்காயம்
  5. 2தக்காளி
  6. 50 கிராம்துவரம் பருப்பு
  7. 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்-(அல்லது மிளகாய் தூள்-1/2 டீ ஸ்பூன் மல்லித் தூள்- 1 டேபிள் ஸ்பூன்)
  8. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 1பச்சை மிளகாய்
  10. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  11. 1 டேபிள் ஸ்பூன்புளி கரைசல்
  12. தேவையான அளவுஉப்பு
  13. தேவைப்பட்டால்கொத்தமல்லி இலை
  14. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  15. 1/4 கப்துருவிய தேங்கா
  16. 1/4 டீ ஸ்பூன்சீரகம்
  17. தாளிக்க தேவையான பொருட்கள்:
  18. 1 டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  19. 1/4 டீ ஸ்பூன்கடுகு
  20. 1/4 டீ ஸ்பூன்வெந்தயம்
  21. 1/4 டீ ஸ்பூன்சீரகம்
  22. ஒரு கொத்துகருலேப்பில்லை
  23. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்

  2. 2

    சுரைக்காய் தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    தண்டுகீரையின் இலைகளை எடுத்து விட்டு, தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  4. 4

    முருங்கைகாய், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்

  5. 5

    துவரம் பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்

  6. 6

    ஒரு குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கிய சுரைக்காய், கீரைத்தண்டு, முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கிளறவும்.

  7. 7

    மேலும் புளி கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  8. 8

    பின்பு விசில் அடங்கியதும் மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  9. 9

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்  பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்த்து நன்கு கிளறவும்.

  10. 10

    தேவைப்பட்டால் கொத்தமல்லி இலை களை தூவி கிளறவும்.

  11. 11

    சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes