சுரைக்காய் முருங்கை  சாம்பார்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

 #முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/2சுரைக்காய
  2. 2முருங்கை காய்
  3. -1பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 50 கிராம்துவரம் பருப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன்சாம்பார் தூள்- (அல்லது மிளகாய் தூள்-1/2 டீ ஸ்பூன் மல்லித் தூள்- 1 டேபிள் ஸ்பூன்)
  7. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 1பச்சை மிளகாய்
  9. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 1 டேபிள் ஸ்பூன்புளி கரைசல்
  12. தேவைப்பட்டால்கொத்தமல்லி இலை
  13. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்
  14. 1/4 கப்துருவிய தேங்காய்
  15. 1/4 டீ ஸ்பூன்சீரகம்
  16. தாளிக்க தேவையான பொருட்கள்
  17. 1 டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  18. 1/4 டீ ஸ்பூன்கடுகு-
  19. 1/4 டீ ஸ்பூன்வெந்தயம்
  20. 1/4 டீ ஸ்பூன்சீரகம்
  21. ஒரு கொத்துகருலேப்பில்லை
  22. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்

  2. 2

    சுரைக்காய் தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    முருங்கைகாய், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்

  4. 4

    துவரம் பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்

  5. 5

    ஒரு குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கிய சுரைக்காய், முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    மேலும் புளி கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  7. 7

    பின்பு விசில் அடங்கியதும் மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  8. 8

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்  பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்த்து நன்கு கிளறவும்.

  9. 9

    தேவைப்பட்டால் கொத்தமல்லி இலை களை தூவி கிளறவும்.

  10. 10

    சூடான சாதத்துடன் பரிமாறலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes