தேவையான பொருட்கள்

  1. 1கப் ரவை
  2. 1/4கப் கோகோ பவுடர்
  3. 1/2கப் பொடித்த சீனி
  4. 80மில்லி சமையல் எண்ணெய்
  5. 200மில்லி - பால்
  6. 80மில்லி - தயிர்
  7. 1/2தேக்கரண்டி - பேக்கிங் சோடா
  8. 1/2தேக்கரண்டி - பேக்கிங் பவுடர்
  9. 3மேசைக்கரண்டி - பாதாம், பிஸ்தா துண்டுகள்
  10. 1மேசைக்கரண்டி - கிரான்பெர்ரி
  11. 1மேசைக்கரண்டி - கிஸ்மிஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேக் மோல்டில் வெண்ணெய் தடவி மாவு தூவி வைக்கவும்.

  2. 2

    அவனை 180 டிகிரி சென்டிகிரேடில் முற்சூடு (preheat) செய்யவும்.

  3. 3

    ஒரு பவுலில் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பொடித்த சீனி, கோகோ பவுடர், ரவை முதலியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  4. 4

    கலந்த பின்னர் சமையல் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்துக் கலக்கவும்.

  5. 5

    பின்னர் 100 மில்லி பால் சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.

  6. 6

    பத்து நிமிடம் கழித்து மீதியுள்ள பாலைக் கேக் கலவையோடு சேர்த்துக் கலக்கவும்.

  7. 7

    பாதி பாதாம் பிஸ்தா துண்டுகள், கிரான் பெர்ரிஸ், கிஸ்மிஸ் சேர்த்துக் கலந்து கலவையை கேக் மோல்டில் ஊற்றவும்.

  8. 8

    கேக் கலவையின் மேல் மீதமுள்ள பாதாம் பிஸ்தா துண்டுகள், கிரான் பெர்ரிஸ், கிஸ்மிஸ் சேர்த்துத் தூவவும்.

  9. 9

    சூடுபடுத்திய அவனில் கேக் கலவையை வைத்து பதினைந்து நிமிடங்கள் அல்லது கேக் வேகும் வரை பேக் செய்யவும்.

  10. 10

    வெந்ததும் வெளியே எடுத்து நன்கு ஆற வைத்துப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes