பத்து நிமிட பால் கொழுக்கட்டை

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#fitwithcookpad
#goldenapron3
#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4பேருக்கு
  1. பச்சரிசி மாவு 200 கிராம்
  2. அச்சுவெல்லம் 2 துண்டு(100 கிராம்)
  3. சீனி 100 கிராம்
  4. ஏலக்காய் தூள் கால் ஸ்பூன்
  5. தேங்காய் பால் ஒரு கப்
  6. தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பல் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரை வைத்து அடுப்பை பற்ற வைக்கவும். அந்த தண்ணீர் கை பொறுக்கும் சூடு வருவதற்குள் அரிசி மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து அரை கப் சுடுதண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.தண்ணீர் கொதி வருவதற்குள் நமக்கு பிடித்த வடிவத்தில் உருண்டையாகப் அல்லது நீளமாகவோ பால்கொழுக்கட்டை உள்ளங்கையில் வைத்து வேகமாக உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போடவும்

  2. 2

    கொழுக்கட்டைகள் வெந்து மேலெழுந்து வரும் பொழுது அவற்றை அறி கரண்டியால் அரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு கொழுக்கட்டை வெந்த அதே தண்ணீரில் அச்சு வெல்லம் மற்றும் சீனியை கொட்டி கிளறினால் திக்கான பாகு கிடைக்கும். வெல்ல வாசனை போனவுடன் வேக வைத்த கொழுக்கட்டை ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை உப்பு அனைத்தையும் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

  3. 3

    இப்பொழுது கொழுக்கட்டை நன்கு கெட்டியாக வந்துவிடும் அப்பொழுது தேங்காய் பால் மற்றும் தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பல் சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும். சுவையான சூப்பரான பால் கொழுக்கட்டை தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes