நாட்டு காய்கறி விருந்து

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#நாட்டு
பாகற்காய் புளி குழம்பு
சுரைக்காய் பருப்பு கூட்டு
பீர்க்கங்காய் மோர் குழம்பு
பாகற்காய் இறால் பொரியல்
புடலங்காய் ஸ்டப்புடு சப்பாத்தி
பூசணிக்காய் அல்வா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. சுரைக்காய் பருப்பு செய்வதற்கு:
  2. சுரைக்காய்-1/4 கிலோ
  3. வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
  4. தக்காளி-1 பொடியாக நறுக்கியது
  5. கடுகு-1/4 டீஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  7. கருவேப்பிலை-1 கொத்து
  8. சீரகம்-1/2 டீஸ்பூன்
  9. பச்சை மிளகாய்-2
  10. சிறு பருப்பு-1/4 கப்
  11. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  13. சீரக தூள்-1/2 டீஸ்பூன்
  14. உப்பு-தேவைக்கேற்ப
  15. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  16. பீர்க்கங்காய் மோர் குழம்பு:
  17. பீர்க்கங்காய்-1/4 கிலோ
  18. தயிர்-1 கப்
  19. தேய்ங்காய்-1/4 கப்
  20. சின்ன வெங்காயம்-3
  21. கடுகு-1/4 டீஸ்பூன்
  22. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  23. சீரகம்-1/4 டீஸ்பூன்
  24. பச்சை மிளகாய்-2
  25. கருவேப்பிலை-1 கொத்து
  26. கடலை பருப்பு-2 டீஸ்பூன்(ஊற வைத்து கொள்ளவும்)
  27. காய்ந்த மிளகாய்-2
  28. உப்பு-தேவைக்கேற்ப
  29. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  30. பாகற்காய் புளி குழம்பு செய்வதற்கு:
  31. பாகற்காய்-1/4 கிலோ
  32. பூண்டு-3 பள்ளு
  33. கருவேப்பிலை-1 கொத்து
  34. சின்ன வெங்காயம்-10
  35. பச்சை மிளகாய்-2
  36. தேங்காய்-1/4 கப்
  37. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  38. காஷ்மீர் மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  39. சீரக தூள்-1/2 டீஸ்பூன்
  40. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  41. கடுகு-1/4 டீஸ்பூன்
  42. உளத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  43. வெந்தயம்-1/4 டீஸ்பூன்
  44. சீரகம்-1/2 கப்
  45. உப்பு-தேவைக்கேற்ப
  46. எண்ணெய்-தேவைக்கேற்ப
  47. பாகற்காய் பொரியல் செய்வதற்கு:
  48. பாகற்காய்-1/4 கிலோ
  49. இறால்-8
  50. சின்ன வெங்காயம்-10
  51. பச்சை மிளகாய்-2
  52. கருவேப்பிலை-1 கொத்து
  53. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  54. சீரக தூள்-1/2 டீஸ்பூன்
  55. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  56. கடுகு,உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  57. சீரகம்-1/2 டீஸ்பூன்
  58. உப்பு-தேவைக்கேற்ப
  59. எண்ணெய்-தேவைக்கேற்ப
  60. தேங்காய் துருவல்-1/4 கப்
  61. மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வதற்கு:
  62. மஞ்சள் பூசணிக்காய்-1/4 கிலோ
  63. சர்க்கரை-தேவையான அளவு
  64. ஏலக்காய் தூள்-1/4 டீஸ்பூன்
  65. முந்திரி-10 துண்டு
  66. பால்-1/4 கப்
  67. நெய்-தேவையான அளவு
  68. கேசரி பவுடர்-ஒரு பின்ச்
  69. ஸ்டஃபுடு சப்பாத்தி செய்வதற்கு:
  70. மைதா-1 கப்
  71. எண்ணெய்-தேவைக்கேற்ப
  72. புடலங்காய்-1 சிறியது
  73. உருளைக்கிழங்கு-1 சிறியது
  74. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  75. சீரக தூள்-1/4 டீஸ்பூன்
  76. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  77. மல்லி தழை-சிறிதளவு
  78. உப்பு-தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

1 1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு,உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் வதங்கியதும், தக்காளி மற்றும் சுரைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பின் அதில் ஊற வைத்த சிறு பருப்பை,மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு,சீரக தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். தண்ணீர் ஊற்றி 3 விசில் போடவும்.

  4. 4

    சுவையான சுரைக்காய் பருப்பு ரெடி.

  5. 5

    பீர்க்கங்காய் மோர் குழம்பு செய்வதற்கு:ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் பீர்க்கங்காயை சேர்க்கவும்.

  6. 6

    தேங்காய், சின்ன வெங்காயம், ஊற வைத்த கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  7. 7

    அரைத்த விழுதை கொதித்த பீர்க்கங்காயுடன் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  8. 8

    கொதித்த உடன் அதை இறக்கவும்.

  9. 9

    தயிரை நன்கு அடித்து கொள்ளவும்.

  10. 10

    ஆறிய பிறகு அடித்து வைத்த தயிர் சேர்க்கவும்.

  11. 11

    கடைசியாக கடுகு,உளுத்தம் பருப்பு,காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றவும்.

  12. 12

    பாகற்காய் புளி குழம்பு செய்வதற்கு:பாகற்காயை வட்டமாக வெட்டி கொள்ளவும்.

  13. 13

    பின் அதை பொரித்த எடுத்து கொள்ளவும்.

  14. 14

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்,வெந்தயம், பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  15. 15

    பின் அதில் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி,காஷ்மீர் மிளகாய் தூள்,மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறவும்.

  16. 16

    தேங்காய்,மிளகு,பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  17. 17

    புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்

  18. 18

    அரைத்த விழுதை,கரைத்த புளியுடன் சேர்த்து வதக்கிய கலவையில் ஊற்றவும்.

  19. 19

    நன்கு கொதித்த பின் பொரித்து வைத்த பாகற்காயை சேர்க்கவும்.

  20. 20

    5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.

  21. 21

    இறால் பாகற்காய் பொரியல் செய்வதற்கு:

  22. 22

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  23. 23

    பின் சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  24. 24

    வெங்காயம் வதங்கியதும், பாகற்காய் மற்றும் இறால் சேர்த்து வதக்கவும்.

  25. 25

    பின் அதி மஞ்ச்ள் தூள்,சீரக தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

  26. 26

    1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் போடவும்.

  27. 27

    கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து, கிளறி இறக்கவும்.

  28. 28

    மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வதற்கு:

  29. 29

    பூசணிக்காயை துருவி வைத்து கொள்ளவும்.

  30. 30

    ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரியை வறுத்து எடுக்கவும்.

  31. 31

    பின் அதில் துருவிய பூசணிக்காயை சேர்த்து வதக்கவும்.

  32. 32

    கால் கப் பால் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.

  33. 33

    நன்கு வெந்த பிறகு சிறிது நெய்,சர்க்கரை, கலர் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

  34. 34

    கடைசியில் நெய் விட்டு,வறுத்த முந்திரி போட்டு இறக்கவும்.

  35. 35

    புடலங்காய் சப்பாத்தி செய்வதற்கு:

  36. 36

    ஒரு பௌலில் கோதுமை,உப்பு,எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

  37. 37

    பின் புடலங்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேகவைத்த கொள்ளவும்.

  38. 38

    அதை பிசைந்து சிறிது சீரக தூள்,மஞ்சள் தூள், உப்பு,மிளகாய் தூள், மல்லி தழை போட்டு கிளறி கொள்ளவும்.

  39. 39

    மாவை திரட்டி இந்த கலவையை அதில் வைத்து,மறுபடியும் மெல்லியதாக சப்பாத்தி போல திரட்டி கொள்ளவும்.

  40. 40

    தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி போட்டு எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes