தேவையான பொருட்கள்

  1. 1கப்இட்லி அரிசி
  2. 1/4 கப்பொட்டுக்கடலை
  3. 1டீஸ்பூன்ஓமம் அல்லது சீரகம்
  4. 1டீஸ்பூன்எள்
  5. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் இட்லி அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும் அதனுடன் காரத்திற்கேற்ப மூன்று அல்லது ஐந்து வரமிளகாயை சேர்த்து ஊற வைக்கவும்.
    மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை நைசாக பொடி செய்து கொள்ளவும். பின்பு ஊறவைத்த அரிசி மிளகாயை சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு,தேவையான அளவு உப்பு, ஓமம் அல்லது சீரகம்,எள் மற்றும் சூடான எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும், முறுக்கு மனையில் அக்கு வடிவ அச்சை எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை நிரப்பவும்.
    ஒரு அகலமான கரண்டியின் பின்புறம் முறுக்கு மாவை பிழிந்து விடவும். பின்பு அதனை சூடான எண்ணெயில் சேர்க்கவும்.

  4. 4

    முறுக்கு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். எண்ணெய் பொங்குவது நின்றதும் வடித்து எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முறுக்கு தயார் 😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes