எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை - 3
  2. உப்பு - தேவைக்கு
  3. மைதா - 3/4 கப்
  4. பால் - 1 கப்
  5. பேக்கிங் பவுடர் - 1/4 spoon
  6. நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
  7. நறுக்கிய தக்காளி - 1/2 kap
  8. கொத்தமல்லி - 1 கைப்பிடி
  9. குடை மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - தேவைக்கு
  10. சாட் மசாலா -1/4 ஸ்பூன்
  11. நெய் அல்லது பட்டர் அல்லது ஆயில் 1ஸ்பூன்
  12. சீஸ் - தேவை எனில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பௌலில் 1 முட்டை எடுத்து அதில் உப்பு மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதில் 3/4 கப் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து தனியே வைக்கவும்.

  2. 2

    பின்னர் மற்றும் ஒரு பௌலில் முட்டை 2 உப்பு தேவைக்கு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்த மல்லி, சாட் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் ஒரு வாணலியில் பட்டர் அல்லது நெய் தடவிக் கொண்டு அதில் கலந்த மைதா பால் கலவையை ஊற்றவும். 2 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு பின் அதன் மேல் முட்டை கலவையை ஊற்றி 2நிமிடம் வேக விட்டு பின் திருப்பி போட்டு 1நிமிடம் வேக விடவும் பின் விரும்பினால் முட்டை கலவையின் மேல் சீஸ் தூவி சூடாக இருக்கும் போதே ரோல் போல் சுற்றவும். பின் தேவையான அளவில் 2ண்டு பாகம் அல்லது சிறு ரோல் ஆக வெட்டிக் கொள்ளவும். சாஸ் உடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes