கையில் பிடிக்க ஒரு சுவையான காய்கறி பொக்கே (boquet)

கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். சப்பாத்தி கல்லின் மீது வைத்து மறுபடியும் மடித்து மடித்து மாவை பக்குவப்படித்தி, சப்பாத்திகள் செய்து, பிறகு அவைகளை சுட்டு ரேப் (wrap) செய்ய தயார் செய்தேன், இரண்டு வகையான பில்லிங் (filling):1 வெள்ளை பீன்ஸ், (மச்சைக்கோட்டை போல) உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்த கறி (2) லெட்யூஸ் , கேரட், அவகேடோ, ஆப்பிள்
½ கப் பில்லிங்கை சப்பாத்தி மேல் வைத்து புகைப்படத்தில் இருப்பது போல மடித்து முடினேன். சத்தான, சுவையான இரண்டு விதமான
கிரேப்புகளை குழந்தைகள் ருசித்து மகிழ்வார்கள் # #ஸ்னாக்ஸ் #book
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க, தேவையான பொருட்களை அருகில் வைத்து கொள்ளுங்கள்.
- 2
முதலில் கார ஃ பில்லிங் தயார் செய்க.
ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரில் வெள்ளை பீன்ஸ்சை 1 மணி ஊற வைக்க. தோலுரித்த உருளைக்கிழங்கை, ஊறவைத்த வெள்ளை பீன்ஸ் இரண்டையும் ஒரே பிரஷர் குக்கரில் வேகவைக்கலாம். பீன்ஸ் கிண்ணத்தின் மேல் ஒரு பிளேட் வைத்து முடி, அதன் மேல் உருளை வைத்து வேகவைக்க. குழைய வைக்காதீர்கள். மிதமான நெருப்பு உபயோகிக்க. அடுப்பின் மிது ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு சீரகம் பெருங்காயம் தாளிக்க. வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து வதக்க. 4 நிமிடங்கள். - 3
வேகவைத்த பீன்ஸ், உருளை. சேர்த்து கிளறுக. கொத்தமல்லி, உப்பு சேர்த்து கிளறுக. அடுப்பை அணைத்து ஃ பில்லிங்கை ஆறவைக்க,
- 4
ரேப் மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க, சிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 15 அல்லது 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. சப்பாத்தி குழிவியால் உருண்டையை தேய்த்து சப்பாத்தியை எண்ணை தடவிய ஸ்கில்லெட்டில் சுட்டுகொள்ளுங்கள். 4 ரேப் செய்துகொள்ளுங்கள்
- 5
2 ரேப் கார ஃ பில்லிங். புகை படத்தில் இருப்பது போல ½ கப் ஃ பில்லிங்கை ரேபிபின் மேல் பரப்பி மடியுங்கள். மடிப்பை கிராம்பு உபயோகித்து சீல் (seal) செய்க கையில் பிடித்து சுலபமாக சாப்பிடலாம்
- 6
பச்சை காய்கறி ரேப்: புகை படத்தில் இருப்பது போல ½ கப்
காய்கறி ஃ பில்லிங்கை ரேபின் மேல் பரப்பி மடியுங்கள். மடிப்பை கிராம்பு உபயோகித்து சீல் (seal) செய்க கையில் பிடித்து சுலபமாக சாப்பிடலாம் - 7
சத்தான சுவையான இரண்டு விதமான ரேப்கள் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


இட்லி உப்புமா


ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்


பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா


கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்


ஒரு ஜம்போ பேஸ்டரி


அவியல்


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


கிரீன் பீன்ஸ் சுக்கா


கேரட் கூட்டு


முட்டைகோஸ் கறியமுது


ஸ்டவ்ட் புடலை


லிக்விட் பரோடா, கூட்டு


பெர்ள் ஆனியன் சாம்பார்


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி


இனிப்பான ஆப்பிள் சமோசா


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


கொத்து கடலை சுண்டல்


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)


சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


ரெட் ஸ்பைசி கிரேவி


கேழ்வரகு வெல்ல அடை

கமெண்ட்