தேவையான பொருட்கள்

  1. 2 கப் - பெரிய நெல்லிக்காய் துருவல்
  2. 1/4 தேக்கரண்டி - மஞ்சள் பொடி
  3. 1/2 தேக்கரண்டி - பெருங்காயத்தூள்
  4. 2 தேக்கரண்டி - மிளகாய்ப் பொடி
  5. 1 தேக்கரண்டி - உப்பு
  6. 3 மேசைக்கரண்டி - நல்லெண்ணெய்
  7. 1/2 தேக்கரண்டி - கடுகு
  8. 1 ஆர்க்கு - கறிவேப்பிலை
  9. வறுத்துப் பொடிக்க
  10. 1 தேக்கரண்டி - கடுகு
  11. 1/2 தேக்கரண்டி - வெந்தயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    நெல்லிக்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நெல்லிக்காய் துருவல் தண்ணீர் வற்றியதும் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    எண்ணெய் பிரிந்து வரும் போது வறுத்து அரைத்த கடுகு வெந்தயப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி ஆற வைக்கவும்.

  5. 5

    தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes