கோதுமை கேக்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#book#immunity
இந்த கேக்கில் கார்போஹைட்ரேட்,இரும்புச்சத்து,புரதச்சத்து நிறைந்துள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
ஆறு பேருக்கு
  1. கோதுமைமாவு 300 கிராம்
  2. வெண்ணை 120 கிராம்
  3. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூ
  4. பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா கால் ஸ்பூன்
  6. வெல்லம் 120 கிராம்
  7. தயிர் 100ml
  8. தண்ணீர் 50ml
  9. பட்டை பொடி ஒரு ஸ்பூன்
  10. அலங்கரிக்க
  11. பாதாம் முந்திரி திராட்சை பிஸ்தா தலா 10 கிராம்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் வெல்லம், சமையல் எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    இந்தக் கலவையில் பேக்கிங் பவுடர்,சோடா உப்பு,தயிர், உப்பு ஒரு சிட்டிகைமற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் பட்டை பொடியும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    எல்லா நட்ஸ் தலையும் பெரிய துண்டுகளாக பொடித்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    குக்கரில் உள்ளே உப்புத்தூள் தூவி வைத்துக் கொள்ளவும்.அதன்மேல் ஒரு பிளேட் வைத்து இந்த கேக் மிக்ஸ் அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, குக்கரின் காஸ்கட்டை எடுத்துவிட்டு மூடி போட்டு மிதமான தீயில் 45 நிமிடம் மூடி வைக்கவும்.

  5. 5

    45 நிமிடம் கழித்து இந்த கலவை பத்து நிமிடம் அடுப்பை அணைத்து, குக்கரில் வைக்கவும். பத்து நிமிடம் கழித்து தட்டு போட்டு கேக்கை தலைகீழாக எடுக்கவும்.

  6. 6

    சுவையான கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes