முளைகட்டின சத்துமாவு நட்ஸ் கப் கேக்.

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#bakingday.. முளைகட்டின சத்துமாவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகநதது .. அத்துடன் நாட்டுச்சக்கரை, நட்ஸ் சேர்த்து செய்த சத்துக்கள் நிறைந்த கேக்கை குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை இங்கே பகிர்ந்துள்ளேன்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35-40நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் சத்துமாவு (sprouted)
  2. 3/4 கப் நாட்டு சக்கரை
  3. 2டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  4. 1/4 கப் தயிர்
  5. 1/2 கப் பால்
  6. 1/4 கப் ஆயில்
  7. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  9. ஒரு சிட்டிகை உப்பு
  10. 4பேப்பர் கப்
  11. 1ஸ்பூன் நெய்
  12. 1/4 கப் துருவின முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராக்ஷை

சமையல் குறிப்புகள்

35-40நிமிடம்
  1. 1

    ஒரு அடிகனமான சட்டியை ஸ்டவ்வில் வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து டைட்டா மூடி ஹைய்யில் 5 நிமிடம் பிரி ஹீட் செய்துக்கவும்.முதலில் ஒரு பவுலில் நாட்டு சக்கரை, தயிர் சேர்த்து நன்கு பீட் செய்து அத்துடன் ஆயில் சேர்த்து நன்கு கலந்து பீட் செய்யவும்.

  2. 2

    அத்துடன் சத்துமாவு, பால் பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சல்லடையில் சலித்து சேர்த்து கலந்துக்கவும்.(dry ingredients)

  3. 3

    அதில் பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து மெதுவாக கலக்கவும். மாவு ரொம்ப கட்டியாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் சரியான பதத்துக்கு கலந்துக்கவும்., (எடுத்து ஊற்றும்போது மடிப்பு போல் வர வேண்டும்)

  4. 4

    அதில் எடுத்து வைத்திருக்கும் நட்ஸ் சேர்த்து மெதுவாக கலந்துக்கவும். பேப்பர் கப்பில் நெய் தடவி ரெடியாக எடுத்து வைத்துக்கவும்.

  5. 5

    கேக் கலவையை பாதி அளவு பேப்பர் கப்பில் ஊற்றி அதற்க்கு மேல் நட்ஸ்யை தூவி பேக் பண்ணற பாத்திரத்திலுள்ள ஸ்டாண்டில் வைத்து மிதமான ஹீட்டில் 35 - 40 நிமிடத்துக்கு பேக் செய்யவும்.. 30 நிமிடத்துக்கு பிறகு வெந்திருக்கிறதா என்று பாக்க ஒரு குச்சியால் குத்தி பாத்துக்கவும்.

  6. 6

    பேக் ஆனதும் கேக் எடுத்து ஆறவிடவும்.ஆறின கேக்கின் ஓரங்களை மெதுவாக ஒரு கத்தியால் சுற்றி எடுத்து விட்டால் கேக் ஒட்டாமல் வந்து விடும்....முளைகட்டின சத்துமாவுடன், நாட்டு சக்கரை, நட்ஸ் சேர்த்து செய்த மிக சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த பஞ்சு போன்ற மிருதுவான சத்தான கேக் தயார்... குறிப்பு - 1/2 கப் சத்துமாவு + 1/2 கப் கோதுமை மாவு இரண்டும் சேர்த்தும் செய்யலாம்.. நாட்டு சக்க்ரைக்கு பதில் சுகர் சேர்த்தும் செய்யலாம்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes