தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
,6 பேர்
  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. பொடித்த சர்க்கரை ஒரு கப்
  3. ரீஃபைண்ட் ஆயில் ஆயில் கால் கப்
  4. கொக்கோ பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  5. பால் அரை கப்
  6. எலுமிச்சம்பழச் சாறு ஒரு ஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்
  8. பேக்கிங் சோடா கால் ஸ்பூன்
  9. உப்பு ஒரு சிட்டிகை
  10. சாக்லேட் சிரப் தயாரிக்க கொக்கோ பவுடர் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன் பால் சிறிதளவு வெண்ணை ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    கோதுமை மாவு ஒரு கப் கோகோ பவுடர் இன்ஸ்டன்ட் காபி பவுடர் ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒரு சல்லடையில் போட்டு நன்றாக சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    இதேவேளையில் குக்கரை ப்ரீ ஹிட் செய்ய குக்கரை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைக்க வேண்டும்

  3. 3

    பாலில் எலுமிச்சை பழச்சாறு கலந்து 5 நிமிடம் வைக்க வேண்டும்

  4. 4

    சலித்த மாவுடன் பொடித்த சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு பாலை சிறிது சிறிதாக சேர்க்கவேண்டும் எண்ணையையும் இதனோடு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்

  5. 5

    கேக் செய்யும் டின்னில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி எல்லா பக்கமும் நன்றாக தேய்த்துவிட வேண்டும் இப்போது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை அதனுள் நன்றாக ஓட்டும்படி செய்ய வேண்டும் மீதமுள்ள மாவை கீழே கொட்டி விட வேண்டும்

  6. 6

    செய்து வைத்திருக்கும் கேக் கலவையை கேக் டின்னில் ஊற்றி நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்

  7. 7

    ப்ரீ ஹீட் செய்து வைத்திருக்கும் குக்கரில் ஒரு ஸ்டாண்டை வைத்து அதன்மீது ரெடி செய்து வைத்திருக்கும் கேக் டின்னை வைக்க வேண்டும் குக்கருக்கு விசில் போடக்கூடாது

  8. 8

    45 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வேக வேண்டும் 45 நிமிடங்கள் கழித்து கேக்கை சிறு குச்சியால் குத்தி பார்க்கவேண்டும் குச்சியில் ஒட்டாமல் வந்தால் கேக் தயார்

  9. 9

    ஒரு பாத்திரத்தில் கொக்கோ பவுடர் சர்க்கரை பவுடர் வெண்ணை பால் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் கிளறி விட வேண்டும் இரண்டு நிமிடங்களில் சாக்லேட் சிரப் தயாராகிவிடும்

  10. 10

    நாம் ஏற்கனவே ரெடி செய்து வைத்திருக்கும் கேக்கில் இந்த சாக்லேட் சிரப்பை ஊற்ற வேண்டும் மிகவும் சுவையான கோதுமை மாவில் செய்த சாக்லேட் கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes