காரசார தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பேர்
  1. 5நன்கு பழுத்த பெரிய தக்காளி
  2. இரண்டு ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  3. சிறிய ஸ்பூன்ரசப்பொடி இரண்டு
  4. உப்பு தேவையான அளவு
  5. ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. ஒரு குழிக்கரண்டிசமையல் எண்ணெய்
  7. 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. தாளிக்க
  9. ஒரு ஸ்பூன் கடுகு
  10. ஒரு ஸ்பூன் உளுந்து
  11. 1வர மிளகாய்
  12. கறிவேப்பிலை சிறிதளவு
  13. பெருங்காயத்தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை கழுவி பொடியாக அரிந்து வைக்கவும்.ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் தனி மிளகாய் தூள்,தேவையான உப்பு, ரசப்பொடி 2 சின்னஸ்பூன், எடுத்து வைக்கவும்.

  2. 2

    வானவில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் பெருங்காயத் தூள் தாளித்து சிவந்ததும் அறிந்த தக்காளியைப் போட்டு கிளறி மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.தக்காளி பாதி வதங்கியதும் ஒரு தடவை கிளறி விட்டு பொடி வகைகளை போட்டு கிளறி விடவும. கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்

  3. 3

    நல்லெண்ணெய் 2 ஸ்பூன் விட்டு கலந்து முழுவதும் நன்கு வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும். தக்காளி தொக்கு காரசாரமாய் சுவையாக இருக்கும் இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பர். பிரட் டோஸ்ட் க்கு தொட்டுக்கொள்ள மறந்துவிடாதீர்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes