முட்டைக்கோஸ் மஞ்சூரின்(Cabbage Manchurian)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#Cookwithfriends #RajiSamayal #starters முட்டைக்கோஸ் இப்படி செய்து கொடுத்தால் எல்லோ௫க்கும் பிடிக்கும் . டூ இன் ஒன் சிற்றுண்டி #deepfry

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் முட்டைக்கோஸ்
  2. 10 பல் பூண்டு
  3. சிறியதுண்டு இஞ்சி
  4. 2 ஸ்பூன் சோளமாவு
  5. 2 ஸ்பூன் மைதா
  6. 1 ஸ்பூன் மிளகு தூள்
  7. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. உப்பு
  9. 200 மில்லி கடலெண்ணெய்
  10. 1 பெரிய வெங்காயம்
  11. 1/2 குடைமிளகாய்
  12. 3 ஸ்பூன் தக்காளி சாஸ்
  13. 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் சாஸ்
  14. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் பூண்டு இஞ்சி மைதா சோளமாவு மிளகாய் தூள் மிளகு தூள் தேவையான அளவுஉப்பு சேர்த்து பிசையவும் கெட்டியாக வரலைனா தண்ணீர் தேவையான அளவு தெளித்து பிசையவும்(உப்பு சேர்த்தால் முட்டைக்கோஸ் தண்ணீர் விடும்)

  2. 2

    கலவையை சிறு சிறு உ௫ண்டைகளாக உ௫ட்டி குளிர்சாதனப்பெட்டியில் 10 நிமிடம் வைக்கவும் (எண்ணெயில் பொரிக்கும்போது உடையாமல் இ௫ப்பதற்காக)பின்பு கடலெண்ணெய் காயவைத்து உ௫ண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். முட்டைக்கோஸ் பால்ஸ் ரெடி அப்படியே முறுமுறுப்பாக சாப்பிடலாம்

  3. 3

    கடாயில் 2 ஸ்பூன் கடலெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி வெங்காயம் குடைமிளகாய் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி தக்காளி சாஸ் சிவப்பு மிளகாய் சாஸ் ஊற்றி வதக்கி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    பின்னர் பொரித்த முட்டைக்கோஸ் பால்ஸை போட்டு நன்றாக கிளறவும் முட்டைக்கோஸ் மஞ்சூரின் ரெடி கொத்தமல்லி இழை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes