சாமை வெஜ் மஞ்சூரியன்

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#cookwithfriends
குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபருக்கு
  1. 200சாமை அரிசி/ 2 கப்
  2. 1 கேரட்
  3. 10 பீன்ஸ்
  4. 1 குடைமிளகாய்
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/2 தூள் மிளகு தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1 ஸ்பூன் கார்ன் ஃப்ளார்
  11. 2 ஸ்பூன் மைதாமாவு
  12. 2 ஸ்பூன் கடலை மாவு
  13. 1/2 ஸ்பூன் சோயாசாஸ்
  14. 1 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  15. 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  16. 1 பூண்டு
  17. 1 துண்டு இஞ்சி
  18. 200 ml பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சாமை அரிசியை நன்கு அலசி குக்கரில் 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

  2. 2

    வேகவைத்த சாமை அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதில் கேரட் பீன்ஸ் சேர்க்கவும்.

  3. 3

    அதில் உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் கடலை மாவு மைதாமாவு கார்ன்ஃப்ளார் மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    கிளறிய கலவையிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து உருண்டைகளை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.

  7. 7

    நன்கு வதங்கிய பின் அதில் சில்லி சாஸ் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  8. 8

    ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி அதில் சேர்க்கவும்.

  9. 9

    2 நிமிடம் கழித்து இப்போது அதில் பொரித்து வைத்த பால்ஸ் சேர்க்கவும். நன்கு கிளறி எடுத்தால் இருப்பது சாமை வெஜ் மஞ்சூரியன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes